Syria | வலியும் விருதும்.. சிரியாவின் நிலைமை இதுதான்.. உண்மையை உணர வைத்த ஒரே போட்டோ!
போர் தரும் துயரங்கள் எனும் சக்திவாய்ந்த செய்தியை சுமக்கும் அந்த புகைப்படத்தை தற்போது பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
சிரியாவில் போரினால் ஏற்படும் துயரங்களை ஒற்றை புகைப்படத்தால் விளக்கிய புகைப்படக்காரருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வருடாந்திர சர்வதேச சியன்னா புகைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. துருக்கியில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளைப் புகைப்படமாக்கிய துருக்கி நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் மெஹ்மத் அஸ்லானிற்கு சிறந்த புகைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
வாழ்வின் துயரங்கள் என தலைப்பிடப்பட்ட அந்த புகைப்படத்தில் சிரியாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் காலை இழந்த தந்தை ஊன்றுகோலைப் பிடித்தபடி கை, கால்கள் இல்லாமல் பிறந்த தன் குழந்தையைத் தூக்கி கொஞ்சுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்கிறார்கள். அந்த தந்தை சிரிய நாட்டின் இட்லிப் பகுதியைச் சேர்ந்த முன்சிர் என்பதும் அவருடைய மகனின் பெயர் முஸ்தஃபா என்பதும் தெரியவந்துள்ளது.
A father and son displaced from #Ghouta. The child was born without legs. The mother was exposed to Nerve gas in 2013. It is impossible to measure the real impact of the gas massacre on born children without an epidemiological study
— Dr. Zaher Sahloul (@sahloul) October 23, 2021
Now living in #Idlib #Syria pic.twitter.com/gFQYngjOjG
இட்லிப்பை விட்டு நீங்கி தற்போது முன்சிரின் குடும்பம் சிரிய எல்லையில் அருகே தெற்கு துருக்கி பகுதியில் வசித்து வருகிறார்கள்.
குழந்தை பிறக்கும்போதே அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கை, கால்கள் இல்லாமல் பிறந்துள்ளார். சிரிய போரின்போது ஏற்பட்ட பாதிப்பால் முஸ்தஃபாவின் தாயார் சைனப் மருந்துகளை உட்கொண்டுள்ளார். அதன் காரணமாகவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தம்பதி பலரிடமும் செயற்கை கை கால்களை வாங்குவதற்கான உதவிகளைக் கோரியுள்ளனர்.
இதையடுத்து விருது வென்ற இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்நிலையில் வாஷிங்ட்டன் போஸ்ட் நாளிதழுக்கு பேட்டியளித்த அவரது தாய், “இந்த புகைப்படம் உலகம் முழுக்க சென்று சேர்ந்துள்ளது. என் மகனின் சிகிச்சைக்கு உதவுமாறு பல ஆண்டுகளாகவே பலருக்கும் கோரிக்கை விடுத்தோம். அவருக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க நாங்கள் எதையும்செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் ஒரு கடையில் வசித்தபோது, புகைப்படக்காரர் அஸ்லான் தனது குடும்பத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
போர் தரும் துயரங்கள் எனும் சக்திவாய்ந்த செய்தியை சுமக்கும் அந்த புகைப்படத்தை தற்போது பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புகைப்படக்காரர் அஸ்லான், விருது வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். 163 நாடுகளிலிருந்து இந்த விருதுக்கு புகைப்படங்கள் அனுப்பப்பட்ட நிலையில் தனது புகைப்படம் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
“ இந்த பிரச்சினைக்கு கவனத்தை குவிக்க நாங்கள் விரும்பினோம். முஃபாசாவின் சிகிச்சைக்கு உதவி கோரும் அவரது பெற்றோரின் குரல்கள் பலரையும் சென்று சேரும். துருக்கியில் அகதிகளுக்கு எதிரான மனநிலையை மாற்ற இது உதவும் என்றும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய புகைப்படக்காரர் சிரியாவின் பஜாரில் பொருட்களை வாங்கச் சென்றபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பால் தனது ஒரு காலை இழந்துள்ளார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சைனப் நெர்வ் கேஸை சுவாசித்துள்ளார்”. இவையே போர் ஏற்படுத்தும் பாரதூர பாதிப்புகள் என்றும் தெரிவித்தார்.
ما اثم الأب والابن
— نيشان (@Neshan) October 23, 2021
كي ينتهي القَدَرُ بِهِما هكذا؟
هُما مِنْ سوريا.
صُورَةٌ تَختَزِلُ وجعَ الدُّنيا
وترفعُ فرحَ قلبِ أبٍ يضحك
على قَدَمٍ وَساق
غصب أنف مُرّ الحياة!
الحياةُ تَليقُ بِكُما.
والصّورة نالت جائزة عالميّة.
عالم جائِر. pic.twitter.com/LK4jLYEPME
.