Buzz Aldrin: நிலவில் கால் வைத்த 2வது மனிதர்.. 93 வயதில் காதலியுடன் திருமணம் - என்னப்பா சொல்றீங்க..?
நிலவில் கால் தடம் பதித்த மனிதர்களில் உயிரோடு உள்ள ஒரே நபரான ஆல்வின் தன்னுடைய 93 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சந்திரனின் மேற்பரப்பில் இரண்டாவதாக கால் வைத்த பஸ் ஆல்ட்ரினின் 93 வது பிறந்தநாள் இன்று. கடந்த 1930 ஆம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள மாண்ட்கிளைரில் பிறந்தவர். மரியன் மூன் - எட்வின் யூஜின் ஆல்ட்ரின்தான் இவரது பெற்றோர். எட்வின் என்ற பெயர் அவரது சகோதரரால் உச்சரிக்க முடியாததால் இவருத்து பஸர் என்று அழைத்தார். காலப்போக்கில் இவரது பெயர் பஸ் என்று ஆனது. தொடர்ந்து தனது தந்தையில் வழியில் அடியெடுத்து நடந்த ஆல்ட்ரின், பள்ளி படிப்பிற்கு பிறகு வெஸ்ட் பாயிண்ட் மிலிட்டரி அகாடமியில் இணைந்தார். அதை தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு விண்வெளி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அக்காலத்தில் எடுக்கப்பட்ட செல்பி:
பஸ் ஆல்ட்ரின் நிலாவில் இரண்டாவதாக காலடி எடுத்து பிறகு, தன்னையும் தன்னை சுற்றியுள்ள கிரகத்தையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படமே உலகின் மிகவும் பிரபலமான புகைப்படத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நிலாவில் நீண்ட நேரம்:
ஆல்ட்ரின் தனது விண்வெளி பயணத்தில் கிட்டத்தட்ட (290 மணிநேரம்) 12 நாட்கள் செலவழித்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், தனது 93 பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று பஸ் ஆல்ட்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இதையப்பூர்வமான நல்லெண்ணங்கள் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து சூரியனை சுற்றி இன்னும் பல புரட்சிகளை செய்ய இது எனக்கு பெரிய நம்பிக்கை அளிக்கிறது. வரும் காலங்கள் முழுவதும் உங்களுக்கு சிறந்து விளங்க என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
Thank you for all of the Happy Birthday wishes and heartfelt goodwill! It means a lot and I hope to continue serving a greater cause for many more revolutions around the sun!!Onward and upward and best wishes to all of you as well!
— Dr. Buzz Aldrin (@TheRealBuzz) January 20, 2023
93 வயதில் திருமணம்:
தொடர்ந்து தான் மற்றும் டாக்டர். அன்கா போர் லாஸ் ஏஞ்சல்ஸை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். அதில்,” எனது 93வது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷனால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்டகால காதலரான டாக்டர். அன்கா ஃபூரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாஸில் ஒரு சிறிய தனியார் விழாவில் நாங்கள் புனித திருமணத்தில் இணைந்தோம். ஏஞ்சல்ஸ் & ஓடிப்போகும் வாலிபர்களைப் போல உற்சாகமாக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.
On my 93rd birthday & the day I will also be honored by Living Legends of Aviation I am pleased to announce that my longtime love Dr. Anca Faur & I have tied the knot.We were joined in holy matrimony in a small private ceremony in Los Angeles & are as excited as eloping teenagers pic.twitter.com/VwMP4W30Tn
— Dr. Buzz Aldrin (@TheRealBuzz) January 21, 2023
நிலவுக்கு பறந்த 12 பேர்களில் ஆல்ட்ரின் மட்டுமே உயிரோடு இருக்கிறார். நிலாவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் 2012லிலும், காலின்ஸ் 2021லிலும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.