முடிவுக்கு வந்த 16 வருட இழுபறி... இந்தியா மீதான தடையை நீக்கம் செய்த அமெரிக்கா...
இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

இந்தியாவின் 3 அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.
அதேசமயம் அணு தாதுப் பொருட்கள், நவீன உப கரணங்கள், தொழில் நுட்பங்கள், இந்தியாவிற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
பாபா அணு ஆராய்சி மையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரேர் எர்த்ஸ் நிறுவனங்கள் தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் 16 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் அணு சக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் சூழலில் ஜோபைடன் நிர்வாகத்தின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

