மேலும் அறிய

North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?

North Korea Rules: வடகொரியாவில் பொதுமக்கள் சிவப்பு நிற லிஸ்ப்டிக்கை பயன்படுத்த, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

North Korea Rules: வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், வடகொரியாவில் பொதுமக்களுக்கு ஏராளமான நூதன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வடகொரியாவும் - கட்டுப்பாடுகளும்:

கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், அடிக்கடி கடுமையான மற்றும்  அசாதாரண சட்டங்களை அமல்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இந்த சட்டங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் தேர்வுகளுக்கு கூட நீட்டிக்கப்படுகிறது. குறிப்பாக அங்கு பிரபலமான உலகளாவிய ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வடகொரிய அரசு சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்திற்கு தடை விதித்துள்ளது.

சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை ஏன்?

சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், வட கொரியா சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்துள்ளது.  காரணம் அந்த நிறத்தை முதலாளித்துவத்தின் அடையாளமாக கிம் ஜாங் உன் கருதுகிறார்.  அதோடு, சிவப்பு உதட்டுச்சாயம் அணிந்த பெண்கள் அவர்களை மிகவும் கவர்ச்சியாகக் காட்டலாம் என்றும், இந்த நடவடிக்கை  எளிமையாகவும்,  அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிரானது எனவும் அரசு தரப்பு கருதுகிறது. எனவே சிவப்பு நிற உதட்டுச் சாயத்திற்கு தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அதிகப்படியான மேக்கப் (ஒப்பனை) வட கொரியாவில் வெறுக்கப்படுகிறது மற்றும் மேற்கத்திய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே, பெண்கள் குறைந்தபட்ச ஒப்பனை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். 

நீளும் தனிமனித கட்டுப்பாடுகள்:

வட கொரியாவின்  பொதுமக்களின் தனிப்பட்ட தோற்றத்தின் மீதான கட்டுப்பாடு சிவப்பு உதட்டுச்சாயத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தாண்டியும் நீள்கிறது. முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருட்கள் மற்றும் பாணிகள் அங்கு தடை செய்துள்ளன. அதில்,  உடலோடு ஒட்டக்கூடிய ஸ்கின்னி ஆடைகள், நீல நிற ஜீன்ஸ், உடலில் கம்மல் போன்ற அணிகலன்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் நீளமான கூந்தலை பராமரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பால் அனுமதிக்கப்பட்ட சிகை அலங்காரங்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். 

இதற்கெல்லாமா தடை..!

சில தடைகள் அரசின் சித்தாந்தத்தையும் தாண்டி  தனிப்பட்டவையாக உள்ளன. கறுப்பு ட்ரெஞ்ச் கோட் அல்லது ஜாங் உன்னின் சிகேட்சர் ஸ்வீப்ட்-பேக் ஹேர் ஸ்டல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை போன்று, பொதுமக்கள் உடை அணிவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய, "க்யுச்சால்டே" அல்லது பேஷன் போலீஸ் உள்ளது. இவர்கள் பொதுமக்களை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். 

விதிகளை மீறினால் என்ன நடக்கும்?

நீல ஜீன்ஸ் அணிவது போன்ற இந்த விதிகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தண்டிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம். விதிகளை மீறியவர்களின் ஆடைகள் பொது இடங்களில் கிழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Embed widget