North Korea Missile Japan: முதல் ஏவுகணையை ஏவிய வடகொரியா: என்ன செய்யப்போகுது ஜப்பான்? காத்திருக்கும் உலகநாடுகள்!
ஜப்பான் மீது வடகொரியா முதல் ஏவுகணையை ஏவியுள்ளதால் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகையே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவமாக இருப்பது, வடகொரியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான போர் பாதற்ற சூழல் தான். ஏற்கனவே பலமுறை உலக நாடுகள் உட்பட ஐ.நா சபை என பல தரப்பில் இருந்தும் எச்சரித்தும் அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளாத வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. அதில் மிகவும் குறிப்பாக இந்த முறை அவ்வாறு நடந்த ஏவுகணை சோதனையானது, ஜப்பான் கடல் எல்லையில், பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இதனால் போர் பதற்ற சூழல் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியிருந்தாலும், அவை எல்லாம் ஜப்பான் கடல் எல்லையில் விழாது. இம்முறை ஜப்பான் கடல் எல்லையில் ஏவுகணை விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை என்பது ஜப்பானை கடந்து தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (04/10/2022) , வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட, ஒலியின் வேகத்தினை விட 17 மடங்கு வேகமாக பறந்து வந்த ஏவுகணை சுமார் 4,600 கிலோமீட்டர்கள் கடந்து வந்து, பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஜப்பான் தரப்பில், ஏவப்பட்ட ஏவுகணை Hwasong-12 ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாலிஸ்டிக் ஏவுகணையாகக் கூட (IRBM) இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
View this post on Instagram
வட கொரியா வழக்கமாக கொரிய தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் ஏவுகணைகளை பரிசோதனை செய்யும். ஜப்பனை ஆத்திரமூட்டும் வகையில் தான் இந்த ஏவுகணை ஏவப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோவின் கூற்றுப்படி ஏவுகணை ஜப்பானின் தோஹோகு பகுதியில் பறந்தது. மேலும், அண்டை நாட்டின் மீது ஏவுகணையை வீசுவது என்பது ஆத்திரமூட்டும் செயல் ஆகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் மீது வடகொரியா ஏவியுள்ள முதல் ஏவுகணை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடையில் வானிலை மோசமாக இருக்கும்போது வட கொரியா அடிக்கடி சோதனையில் இடைவேளை எடுக்கும். மேலும் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் ஆரம்பம் வந்தவுடன் மீண்டும், சோதனைக்கு சரியான சூழ்நிலையாக இருக்கலாம். அதனால் இவ்வாறு வடகொரியா சோதனை நடத்துகையில் ஜப்பானின் எல்லைப் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானின் கடல் எல்லையில் விழுந்துள்ள இந்த ஏவுகணையால் ஜப்பான் மற்றும் வடகொரியாவுக்கு இடையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் வடகொரியாவை எச்சரித்து வந்தாலும் வடகொரியா, மற்றுமொரு அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடந்து வரும் நிலையில், தற்போது வடகொரியா மற்றும் ஜப்பான் இடையிலான இந்த போர் பதற்ற சூழல் மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கமாக அமைந்து விடுமோ எனவும் பலர் பயப்பட்டு வருகின்றனர்.