மேலும் அறிய

Malala Yousafzai Marriage | பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மாப்பிள்ளை.. கரம் பிடித்த மலாலா! ரசிகர்கள் வாழ்த்து!

பெண் கல்விக்காக போராடிய மலாலா தனது திருமணம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மலாலா, “ இந்த நாள் எனது வாழ்வின் பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்கை துணையாக இருக்க முடிவு செய்துள்ளோம். எனது குடும்பத்துடன் ப்ர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்களது பிரார்த்தனைகளை எனக்கு அனுப்புங்கள்” என்று  குறிப்பிட்டுள்ளார். மலாவின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தனது கணவர் தொடர்பான வேறு விபரங்களை மலாலா குறிப்பிடவில்லை. ஆனால் நெட்டிசன்கள் பலர் மலாலா கணவரின் முழுப் பெயர் அஸர் மாலிக் என்றும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். 

அண்மையில் மலாலா பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

Malala Yousafzai Marriage | பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மாப்பிள்ளை.. கரம் பிடித்த மலாலா! ரசிகர்கள் வாழ்த்து!

முன்னதாக, பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில், மரணத்தின் இறுதிகட்டத்திற்கு சென்ற மலாலா உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்களை மலாலா இன்னும் வலுவாக முன் வைக்கத் தொடங்கினார். 

Malala Yousafzai Marriage | பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மாப்பிள்ளை.. கரம் பிடித்த மலாலா! ரசிகர்கள் வாழ்த்து!

2013 ஆம் ஆண்டு மலாலா தனது 16 ஆவது பிறந்தநாளான ஜூலை 12-ல் ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அன்றைய தினத்தை  "மலாலா தினம்" என்று அறிவித்தது. 

பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து போராடி வரும் மலாலாவுக்கு, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். பெண்களின் உரிமை மட்டுமல்லாமல் சர்வதேச அமைதிக்காகவும் மலாலா.  குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌

விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?

Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?

வந்தே பாரத்  ரயிலில் சிகரெட் பிடித்த பயணி... சிக்கியது எப்படி? - எச்சரிக்கும் கருவி

Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்

Embed widget