மேலும் அறிய

Muhammad Yunus: வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ் நியமனம்

Muhammad Yunus: வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையில் சுமார் 14 பேர் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Muhammad Yunus: வங்கதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக, நோபல் பரிசு வென்ற அந்நாட்டைச் சேர்ந்த முகமது யூனஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முகமது யூனஸ் தலைவராக தேர்வு:

மாணவர்களின் புரட்சி காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்,  'ஏழைகளுக்கான வங்கியாளர்' என்று அழைக்கப்படும் யூனஸ், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில், யூனஸ் தலைமையில் வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தில் 10-14 முக்கிய நபர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் அமைப்பு சொல்வது என்ன?

ஷேக் ஹசீனாவை வெளியேற்ற வழிவகுத்த மாணவர் இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நஹிட் இஸ்லாம், "ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்பை ஏற்க பேராசிரியர் யூனுஸ் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்துள்ளார். தற்போது முகமது யூனஸ் பாரீஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச நிலைமை குறித்து அண்மையில் ஏபிபி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “வங்கதேச விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உதவ வேண்டும், உள்நாட்டு விவகாரம் என கூறி ஒதுங்கி இருக்கக் கூடாது” என முகமது யூனஸ் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

யூனஸ் - ஷேக் ஹசீனா மோதல்:

 லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீள உதவியதற்காக, தற்போது 83 வயதான முகமது யூனஸிற்கு, கடந்த  2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. யூனுஸ் மீது 190க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஹசீனா அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் அவர் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 60க்கு மேல் ஆனவர் என்ற அடிப்படையில், கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக யூனுஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1940 இல் சிட்டகாங்கில் பிறந்த முஹம்மது யூனஸ், வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தைத் தொடர அமெரிக்கா செல்வதற்கு முன்பு டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
Breaking News LIVE, 20 Sep :  நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Breaking News LIVE, 20 Sep : நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..!  எப்படி இருக்கு?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
Breaking News LIVE, 20 Sep :  நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Breaking News LIVE, 20 Sep : நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..!  எப்படி இருக்கு?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Embed widget