மேலும் அறிய
Breaking News LIVE, 20 Sep : லட்டு விவகாரம் : "ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்" : ராகுல் காந்தி கவலை
Breaking News LIVE, 20 Sep : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ் லைவ்
Source : Special Arrangement - ABP Network
Background
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - வறட்டு கவுரவத்திற்காக பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்
- தமிழ்நாட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹிட்டை தாண்டி கொளுத்திய வெயில் - மேலும் 4 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என எச்சரிக்கை
- குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க, அக்டோபர் 4ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- வேங்கைவயல் வழக்கு - சி.பி.சி.ஐ.டி.,க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
- சசிகுமாரின் நந்தன், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து, சினு ராமசாமியின் கோழிப்பண்னை செல்லதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் இன்று திரையரங்களில் வெளியாகின்றன
- திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு - தேசிய கால்நடை மற்றும் உணவு மையம் உறுதி செய்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
- முடிவுக்கு வருகிறது கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - நாளை முதல் அத்தியாவசிய சிகிச்சைகளை வழங்கும் பணி தொடரும் என அறிவிப்பு
- கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 12 நாட்களில் ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்
- டெல்லி முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் அதிஷி - புது முகத்திற்கு அமைச்சர் வாய்ப்பு
- மணிப்பூரில் ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையில், 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
- காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: மத்திய அரசு கடும் கண்டனம்
- இந்தியா நோட்டீஸ் எதிரொலி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டாம்: பாகிஸ்தான் அறிவிப்பு
- அடுத்தடுத்து தாக்குதல் எதிரொலி விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை: லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
- இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
- வங்கதேச அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில் சதம் அடித்து அசத்திய அஸ்வின் - முதல் நாள் நேர முடிவில் இந்திய அணி 339/6 ரன்கள் குவிப்பு
21:25 PM (IST) • 20 Sep 2024
பிரதமர் மோடி மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்
"தேர்தலில் தோற்றுவிடுவோம் என பயந்து சிலிண்டர் விலையை ₹200 குறைத்தார் பிரதமர் மோடி" பிரதமர் மோடி மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்
21:05 PM (IST) • 20 Sep 2024
லட்டு விவகாரம் : "ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்" : ராகுல் காந்தி கவலை
"இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்" திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை
Load More
Tags :
PM MODI CM MK STALIN Latest News Latest News Update Breaking News LIVE Kashmir Election Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















