வெளியே வந்தா ஹிஜாப் அணியணும்.. துணைக்கு ஆண் இருக்கணும் - பெண்களுக்கு தாலிபான் போட்ட ஆர்டர்!
கடந்த முறை நடந்த தாலிபன் ஆட்சியை விட இந்த முறை சற்று ‘மிருதுவான’ ஆட்சி நடக்கும் என்று தாலிபன் கூறியிருந்தாலும், நடப்பவை அப்படியாக இல்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு பெண்களை ஆண் துணையின்றி அதிக தூரம் பயணம் செய்வதைத் தடை செய்திருக்கிறது. மேலும் ஹிஜாப் அணிந்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே ஆண்கள் தங்களது வாகனங்களில் இடம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
45 மைல்களுக்கு அதிகமாகப் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் துணையின்றி தனியே வந்திருந்தால் அவர்களுக்கு வாகனங்களில் இடம் கொடுப்பது தடை செய்யப்படுகிறது என்று ஆப்கன் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாதீக் அகிப்ஃ முஹாஜிர் தெரிவித்தார். கூட வரவேண்டியது நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் ஆப்கன் அரசு பெண் கலைஞர்கள் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தது. பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
அதே போல பயணம் செய்யும் பெண்களும் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்றும் வாகனங்களில் இசை எதுவும் ஒலிக்கக் கூடாது என்றும் முஹாஜிர் கூறினார்.
ஹிஜாப் என்பது என்ன, முகத்தை மூடியிருப்பதா, தலை முடியை மறைத்திருப்பதா, முழு உடலையும் மறைத்திருப்பதா என்பது குறித்த விதிமுறைகள் தெளிவில்லாமல் இருந்தாலும் ஆப்கனில் பெரும்பாலான பெண்கள் ஹிஜாப் அணியத் துவங்கிவிட்டனர்.
கடந்த முறை நடந்த தாலிபன் ஆட்சியை விட இந்த முறை சற்று ‘மிருதுவான’ ஆட்சி நடக்கும் என்று தாலிபன் கூறியிருந்தாலும், நடப்பவை அப்படியாக இல்லை.
பள்ளிகளைத் திறக்க வேண்டி குரல் எழுந்தாலும், பெண் குழந்தைகளுக்குப் பள்ளிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பேச்சு எதுவும் தாலிபன் அரசிடம் இருந்து வரவில்லை. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பெண்களுக்கான உரிமை பாதுகாப்பு என்னும் அறிவிப்பில் அவர்களுக்கான கல்வி குறித்து எந்த பேச்சும் இல்லை.
கடந்த முறை ஆட்சியின்போது பெண்களுக்குப் பணியிடங்களும் பள்ளிகள், கல்லூரிகளும் மறுக்கப்பட்டன. சமூக ஆர்வலர்கள் இந்த நிலை மாறும் என்று நம்புவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்