Langya virus : சீனாவில் புதிய வைரஸ்! 35 பேர் பாதிப்பு ! - மூஞ்சூறுவால் பரவியதா ?
35 பேரில் 26 பேருக்கு ஒரே மாதிரியாக தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சீனாவில் லாங்யா என்னும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
லாங்யா வைரஸ் :
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் உலகமே மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லாங்யா என்னும் புதிய வைரஸை ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து , அதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சீனாவின் பல்வேறு இடங்களில் இதுவரையில் நூற்றுக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதன்முதலில் வடகிழக்கு மாகாணங்களான ஷான்டாங் மற்றும் ஹெனானில் 2018 இன் பிற்பகுதியில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இதே வைரஸை கடந்த வாரம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வைரஸ் ஆர்ஜின் :
இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் தைவானின் சுகாதார ஆணையம் இப்போது பரவுவதை கண்காணித்து வருகிறது. இதற்காக பல காட்டு விலங்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஷ்ரூக்கள் என அழைக்கப்படும் மூஞ்சூறு வகை எலிகளிகளின் கால் பகுதியில் லாங்யா ஆர்.என்.ஏவை கண்டுபிடித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 262 மூஞ்சூறுவில் இருந்திருக்கிறது. இது தவிர 2% வீட்டு ஆடுகளிலும் 5% நாய்களிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. விஞ்ஞானிகள் லேவி மரபணுவை வரிசைப்படுத்தி, இது ஹெனிபாவைரஸ் என்று தீர்மானித்தனர். இது ஹென்ட்ரா வைரஸ் மற்றும் நிபா வைரஸையும் உள்ளடக்கிய ஜூனோடிக் ஆர்என்ஏ வைரஸ்களின் வகை. ஹென்ட்ரா வைரஸ் - குதிரைகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் :
வைரஸ் காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை மற்றும் தசை வலி உள்ளிட்டவை இதன் ஆரம்பகால அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காய்ச்சல் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 35 பேரில் 26 பேருக்கு ஒரே மாதிரியாக தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். கடந்த வாரம் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் (NEJM) சீனா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட கடிதத்தில் வைரஸ் குறித்த ஆரம்ப விசாரணைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. Langya henipavirus (LayV) ஆல் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான் இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஆறுதலான தகவல். மேலும் NEJM தாளின் இணை ஆசிரியரான டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் வாங் லின்ஃபா, அரசு நடத்தும் குளோபல் டைம்ஸிடம் கூறுகையில் “ இந்த வைரஸ் அத்தனை ஆபத்தானதோ , தீவிரமானதோ கிடையாது “ என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வைரஸ் மக்களிடையே பரவுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்கின்றனர்,