New Zealand | ஒருத்தருக்குத்தான் கொரோனா... நாட்டுக்கே லாக்டவுன் அடிச்ச நியூசிலாந்து!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பூசியுமே கொரோனாவிடம் இருந்து நம்மை காக்கும் என்பது உலக நாடுகளின் தாரக மந்திரமாகவே உள்ளது.
கொரோனா என்ற வார்த்தை காதுகளில் ஒலிக்கத் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. உலக நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. முதல் அலையோடு கொரோனா ஒழிந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் அலை வந்து தீவிரமானது. தற்போது மூன்றாம் அலையும் வரலாம் என்கின்றனர் மருத்துவத் துறையினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பூசியுமே கொரோனாவிடம் இருந்து நம்மை காக்கும் என்பது உலக நாடுகளின் தாரக மந்திரமாகவே உள்ளது.
இந்தியாவும் கொரோனாவின் இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தீவிரமாக பரவிய கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளின் அதிக கவனம் பெற்றது நியூசிலாந்து. அதிரடி நடவடிக்கையால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து கடந்து 6 மாதங்களாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசிக்கும் 58 வயதான ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.
ஒரு நாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா என்ற செய்தியை கடந்து போகாமல் அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது நியூசிலாந்து அரசு. மேலும் நாடு முழுவதுமே 3 நாளைக்கு ஊரடங்கை அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு குறித்து பேசியுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், '' கொரோனாவின் தாக்கத்தால் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறோம். முன்னெச்சரிக்கையை நாம் கையிலெடுக்கவில்லை என்றால் நாம் சிக்கலில் சிக்குவோம். பெரிய பாதிப்புக்கு முன்பே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நம் வசதியாக உணரும் காலத்தில் வெளியே செல்லலாம் என்றார்.
கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கிய தமிழகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1917 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வெளியாகியுள்ளனர். இன்று கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 209 பேரும், கோயம்பத்தூரில் 206 பேரும், ஈரோட்டில் 167 பேரும், தஞ்சாவூரில் 121 பேரும் , சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நியூசிலாந்து போன்று வெளிநாடுகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பார்க்கும் போது, நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றே தோன்று கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )