Indian Passenger Flights | இனி நெதர்லாந்து பறக்கலாம்! விமானத் தடையை நீக்கியது அந்நாட்டு அரசு!
கொரோனா பரவளின் இரண்டாம் அலை சற்று தணிந்து வரும் நிலையில் நெதர்லாந்து அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
உலக அளவில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது நெதர்லாந்து அரசு. இந்தியாவில் கொரோனா பரவளின் இரண்டாம் அலை சற்று தணிந்து வரும் நிலையில் நெதர்லாந்து அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் இன்னும் இந்திய விமானங்கள் மற்றும் பயணிகளுக்கான தடையை தொடர்ந்து அமலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— IndiainNetherlands (@IndinNederlands) June 1, 2021
சில தினங்களுக்கு முன்பு இந்திய விமானங்களுக்கு கனடா அரசு ஏற்கனவே விதித்திருந்த தடை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 22-ஆம் தேதி வரை, ஏற்கனவே அமலில் இருந்த தடை தொடரும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. கனடா அரசு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த தடைக்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக அனைத்து விமானங்களும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் கனடா நாட்டிற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக பயணிக்க முடியாதே அன்றி, வேறு நாடுகள் வழியாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பயணிக்க கனடா வருவதற்கு இறுதியாக அவர்கள் பயணித்த நாட்டில் இருந்து கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகாயத்தில் நீச்சல் குளமா? அசர வைத்த அற்புத படைப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 1.52 லட்சம், நேற்று 1.27 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.32 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44இல் இருந்து 2 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 832-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 895-ல் இருந்து 3 லட்சத்து 35 ஆயிரத்து 102-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்தில் செயல்படும் இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு கடந்த 26 ஏப்ரல் 2021 முதல் இருந்த தடையை 1 ஜூன் 2021 முதல் விளக்கிக்கொள்வதாக' அறிவித்துள்ளது.