Mountain Gorilla Ndakasi Dies | வைரலான செல்பி ஸ்டார்.. வளர்த்தவரின் தோள்களிலேயே உயிரை விட்டது கொரில்லா டகாசி..!
ஆண்ட்ரே பெளமா ஒரு முறை செஃல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த செல்ஃபியில் தோன்றி போட்டோபாம்பிங் செய்த கொரில்லா வைரலானது.
தனது 14-வது வயதில், வளர்த்த ஆண்ட்ரே என்னும் ரேஞ்சரின் அணைப்பில் மரித்தது டகாசி. காங்கோ நாட்டில் அமைந்துள்ள, விருங்கா தேசிய பூங்காவில் ரேஞ்சராக இருக்கும் ஆண்ட்ரே பெளமா ஒரு முறை செஃல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த செல்ஃபியில் தோன்றி போட்டோபாம்பிங் செய்த டகாசி என்னும் கொரில்லா வைரலானது.
It is with heartfelt sadness that Virunga announces the death of beloved orphaned mountain gorilla, Ndakasi.
— Virunga NationalPark (@gorillacd) October 5, 2021
C’est avec une profonde tristese que Virunga annonce le décès du gorille de montagne orpheliné Ndakasi.https://t.co/GdkJbhWESz pic.twitter.com/bsCKdEq8tB
Virunga may you Rest In Peace. So sad how she lost her mother to humans, and so sweet how she died peacefully in the arms of a very different human, Andre Bauma. Condolences to you, Andre.
— Don’t Fear the Reaper (@MHzMama) October 6, 2021
அந்த வைரல் செஃல்பிக்கு பிறகு காங்கோ நாட்டின் விருங்கா பூங்காவிலும், இன்னும் பல நாட்டினரின் நினைவில் நிற்கும் செல்லமாக மாறிபோனது டகாசி. நேற்று விருங்கா பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டகாசி தனது வளர்ப்பாளரான ஆண்ட்ரே பெளாமாவின் கைகளில் இருக்கும்பொழுதே, அதன் உயிர் பிரிந்துள்ளது. சில காலமாக உடல் நலமற்று இருந்து வந்த டகாசி நம்மைப் பிரிந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
I am so very very broken by this lovely and tragic story. There is so much love in this photo and I'm sorry for the unbearable loss you must feel. Rest well, Ndakasi. #Ndakasi
— Darth Soup (@soupinate44) October 7, 2021
பார்ப்பவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தும் ஒரு புகைப்படத்தை விருங்கா தேசிய பூங்கா வெளியிட்டுள்ளது. அதில் ஆண்ட்ரே பெளமாவின் தோளில் சாய்ந்து உயிர்விட்ட டகாசியின் படம் பார்த்தவுடன் கண்ணீரில் ஆழ்த்துகிறது. அந்த பத்துக்கு வந்துள்ள கமெண்ட்ஸ் உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது. “விருங்கா உனக்கு அமைதி கிடைக்கட்டும். உன் அம்மாவை நீ மனிதர்களால் இழந்தது துரதிர்ஷ்டவசமானது. இப்போது உன்னை மிக விரும்பிய மனிதர் ஆண்ட்ரே பெளமாவின் தோள்களில் உயிரை விட்டிருக்கிறாய். ஆண்ட்ரே பெளமா, உங்களுக்கு எனது இரங்கல்கள்” என்கிறது ஒரு கமெண்ட்.