MK Stalin Dubai Visit LIVE: துபாயில் தொழில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
MK Stalin Dubai Visit LIVE Updates: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து தனி விமான மூலம் துபாய் சென்றுள்ள முதலமைச்சர், உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்
LIVE
Background
Stalin Dubai Trip LIVE Updates:
அரசு முறை பயணமாக துபாய் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது, முதலமைச்சரை பார்த்த திமுகவினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதலமைச்சரை வேஷ்டி, சட்டையில் பார்த்த அவர்களுக்கு, மாடர்ன் உடையில் வந்து ஆச்சர்யம் கொடுத்தார். பேண்ட், சட்டையின் ஜர்கின் போட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து தனி விமான மூலம் துபாய் சென்றுள்ள முதலமைச்சர் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.
தொழில் புரிவதற்கு தமிழ்நாட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும் - முதலமைச்சர் முக ஸ்டாலின்
தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழ்நாட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் தமிழர்கள் பங்கு அளப்பறியது - முதலமைச்சர் முக ஸ்டாலின்
வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது, அளப்பறியது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூபாய் 1600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூபாய் 1600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூபாய் 1600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூபாய் 1600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துபாயில் வணக்கம் என கூறி உரையை தொடங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின்!
ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கான சந்திப்பு மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வணக்கம் என கூறி தனது உரையை தொடங்கினார்.