(Source: ECI/ABP News/ABP Majha)
94 வருடத்தில் முதன்முறை..மேக்கப் இல்லாமல் போட்டியில் கலந்துகொள்ளும் அழகி சொன்னது என்ன?
முதன்முறையாக மேக்கப் இல்லாத பெண் மிஸ் இங்கிலாந்து போட்டியாளராகக் கலந்து கொள்கிறார்
கடந்த 94 வருடங்களாக நடந்து வரும் மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியில் முதன்முறையாக மேக்கப் இல்லாத பெண் மிஸ் இங்கிலாந்து போட்டியாளராகக் கலந்து கொள்கிறார் என்ற வரலாற்றை அரசியல் மாணவி ஒருவர் படைத்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த 20 வயதான மெலிசா ரவூஃப், உள் அழகை ஊக்குவிக்கும் முயற்சியில் மேக்கப் இல்லாமல் தோன்ற முடிவு செய்ததாகவும் இதன் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்திருக்கும் அழகு இலக்கணங்களுக்குச் சவால் விடுவதாகவும் கூறினார்.
View this post on Instagram
"பெண்கள் குறிப்பிட்ட வயதை அடையத் தொடங்கும்போது மேக்கப் அணிந்துகொள்ளத் தொடங்குவதாக நான் உணர்கிறேன், ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்ய வெளிப்புறச் சூழல் அழுத்தம் கொடுப்பதாக உணர்கிறேன்," என்று அவர் பிரபல சர்வதேச ஆன்லைன் பத்திரிகையிடம் அளித்த பேட்டியில் தான் எடுத்த முடிவு குறித்தான பின்னணி குறித்து இவ்வாறு பேசியுள்ளார். ஒருவர் தங்கள் சுய அடையாளத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் அதனை நாம் மூடிமறைக்கக்கூடாது. ஒப்பனையுடன் இல்லாத நம் முகம். நம்மை நம் குறைபாடுகளுடன் ஏற்றுக் கொண்டு நம்மை யார் என்று ஆக்குகின்றன, அதுவே ஒவ்வொரு நபரையும் தனித்துவமாக்குகிறது” என்றார்
"மக்கள் தங்கள் குறைபாடுகளையும் கறைகளையும் நேசிக்க வேண்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் உண்மையான அழகு எளிமையில் உள்ளது." எனக் கூறுகிறார் மெலிசா.
“வெளிப்புறப் பொருட்கள் என் அழகின் தரத்தை நிர்ணயிப்பதாக நான் ஒருபோதும் உணரவில்லை. எனது சொந்த சருமத்தில் நான் அழகாக இருக்கிறேன் என்பதை நான் சமீபத்தில் ஏற்றுக்கொண்டேன், அதனால்தான் மேக்கப் இல்லாமல் போட்டியிட முடிவு செய்தேன், ”என்று அவர் கூறினார்.