Watch Video: பிறந்தநாள் பார்ட்டிக்குள் புகுந்த கரடி.. அரண்டுபோன மக்கள்..உற்சாகமாய் தின்ற கரடி.. இணையத்தில் வைரல்..
சில்வியா மசியாஸ் தனது மகன் பயப்படக்கூடாது என்பதற்காக அவனது கண்களை இறுக்கமாக மூடிகொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோ பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உள்ளே புகுந்து உணவுகளை திருடி தின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோ நகரத்தைச் சேர்ந்த சில்வியா மசியாஸ், டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் சாண்டியாகோவின் 15வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் உள்ள மான்டேரியின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிபின்க்யூ பூங்காவிற்குச் சென்றிருந்தார்.
பிரஞ்சு ப்ரைஸ், என்சிலாடாஸ், டகோஸ் மற்றும் சல்சா ஆகிய உணவுகளை கொண்ட மதிய உணவை அவர்கள் ரெடி செய்த மேடையில் பரிமாறி சாப்பிட உட்கார்ந்து இருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கரடி ஒன்று இவர்களது பிறந்தநாளில் வந்து கலந்துகொண்டது. டைனிங் டேபிளில் ஏறி அவர்கள் கொண்டுவந்த உணவை ஒவ்வொன்றாக சாப்பிட தொடங்கியது.
அப்போது, அங்கிருந்த அவர்களின் நண்பர் ஒருவர் தனது மொபைல்போன் மூலம் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கரடி சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, சில்வியா மசியாஸ் தனது மகன் பயப்பட கூடாது என்பதற்காக அவனது கண்களை இறுக்கமாக மூடிகொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Caught on Camera: A mother didn’t let a bear scare them away from her son’s birthday dinner when it jumped up onto the picnic table and devoured the tacos and enchiladas. https://t.co/pSC16ad7Il#bear #mexico #birthday #birthdayparty #caughtoncamera pic.twitter.com/Ll8Ctx7fYz
— Daily Blast LIVE (@dailyblastlive) September 27, 2023
இதுகுறித்து அந்த இடத்தில் இருந்த சில்வியா மசியாஸ் கூறியதாவது, ‘ நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தது சாண்டியாகோ என்ற கரடி இனம். இது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டது. இந்த வகை கரடி இனங்கள் ஒரு பூனை அல்லது நாயை பார்த்தலே பயப்படும். எந்த வகை மிருக இனமும் இந்த கரடி இனத்தை பயமுறுத்தும்.
அதனால்தான் நான் என் மகனின் கண்களை மூடிக்கொண்டேன். ஏனென்றால் , அவர் அதை பார்த்து கத்தினாலோ அல்லது ஓடினாலோ அந்த கரடி இவனை தாக்க அதிக வாய்ப்புள்ளது. கரடியும் பயத்தில் ஏதாவது முயற்சி மேற்கொண்டால் எங்கள் இருவருக்கும் ஆபத்தாகிவிடும்.” என்றாஎ.
அப்போது செய்தியாளர்கள் மசியாஸிடம் உங்கள் மகன் அந்த கரடியை பார்த்து மிகவும் பயந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்ப, “ஆம், நிறையவே” என்றார்.
இந்த சம்பவானது கடந்த திங்கள் கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டு வைரலான நிலையில், ரீல்ஸ் மற்றும் டிக்டாக் என சுமார் 10 மில்லியனுக்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.