Hotter 2023 : என்னது இவ்வளவு வெப்பமா இருக்குமா? 2023-ஆம் ஆண்டிலும் பிரச்சனை இருக்கா? ஒரு ஷாக் தகவல்..
2022ஐ விட 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
2022ஐ விட 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 10வது ஆண்டாக சர்வதேச வெப்பநிலை என்பது 1 டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. லா நினா காரணமாக இவ்வாறு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022ஐ விட 2023 மிகவும் வெப்பமாக இருக்கும்: பிரிட்டன் வானிலை ஆய்வு மையம்கடுமையான காட்டுத்தீ நிகழ்வு கள், வெள்ளப்பெருக்கு, அதிதீவிரப் புயல்கள் எல்லாம் இந்த எல் நினாவின் விளைவுகள் தான்.
எல் நினோ தெற்கு ஊசலாட்டம் (El Nino Southern Oscillation) என்பது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயற்கையான காலநிலை சுழற்சி. இதில் எல்-நினோ, லா-நினா, இரண்டும் அற்ற சமநிலைப் பருவம் என மூன்று பருவங்கள் உண்டு. வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில், கடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையே காற்று, வெப்பத்தின் பரிமாற்றத்தால் இந்த சுழற்சி தூண்டப்படுகிறது. இரண்டு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊசலாட்டம் நிகழும். ஊசலாட்டத்தின் ஒவ்வொரு அங்கமும் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள்வரை நீடிக்கலாம்.
எல்-நினோ நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்.
லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும்.
சமநிலைப் பருவத்தில் இடைப்பட்ட வெப்பநிலை இருக்கும்.
பசிபிக் பெருங்கடலில் நிகழும் இந்த ஊசலாட்டம், உலகளாவிய வீச்சைக் கொண்டது. இந்தியாவின் பருவமழை, வெப்பநிலை என்று பல அம்சங்களைப் பாதிக்கக்கூடியது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் சராசரி வெப்ப நிலை, ஒரு அடிப்படை அலகாகக் கருதப்படுகிறது. 2021இன் உலகளாவிய சராசரி வெப்பநிலை, இந்த அடிப்படை அளவைவிட, 0.91 டிகிரி செல்சியஸ் முதல் 1.15 டிகிரி செல்சியஸ்வரை கூடுதலாக இருக்கலாம். கடந்த ஏழு ஆண்டு களாகவே அடிப்படை அலகிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் என்றே வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருவது என்பது கவலையளிக்கும் அம்சம்.
2022ஐ விட 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 10வது ஆண்டாக சர்வதேச வெப்பநிலை என்பது 1 டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, உலகளாவிய கரிம உமிழ்வின் அளவு குறைந்தது, சூழலியலாளர்க ளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 2020இன் பிற்பகுதியில் சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, கரிம உமிழ்வின் அளவு பழையபடி உயர்ந்து, ஊரடங்கே நடைமுறைப்படுத்தப்படாத 2019இம் ஆண்டின் அளவைத் தொட்டுவிட்டது. 2021ஆம் ஆண்டிலும் இதே அளவு கரிம உமிழ்வு தொடரும்பட்சத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளும் தீவிரமானவையாக இருக்கும் என்பதே அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை.
2022ஐ விட 2023 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்குக் காரணம் லா நினா சுழற்சியையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றமும் தான் என்று கூறப்படுகிறது. இதனால் கடும் வறட்சிகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.