Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!
தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்வின் பெடிர்கா புக்கர் என்ற பெண்ணை முதலில் 1956 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமான பணிப்பெண்ணான இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்காவில் 92 வயது தொழிலதிபர் 5வதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
5வது திருமணம் செய்யும் 92 வயது முதியவர்:
தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆண் - பெண் சராசரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருமணத்தை தள்ளிப்போடுவது, வயது காரணம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் அமெரிக்காவில் 92 வயது நபர் முதியவர் 5வது திருமணம் செய்யப் போகிறார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக். 92 வயதான இவருக்கு தனது ஊடக உரிமையை மகன் லாச்லனிடம் கடந்த நவம்பர் மாதம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ரூபர்ட் முர்டோக் திருமணத்துக்கு தயாராகியுள்ளார்.
அவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜூகோவாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 67 வயதான மணப்பெண் ஜூகோவா ஒரு ஓய்வுப்பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இருவருக்குமிடையே வயது வித்தியாசம் 25 ஆண்டுகளாக இருக்கும் நிலையில் இந்த திருமணமானது கலிஃபோர்னியாவில் உள்ள பங்களாவில் நடக்கவுள்ளது. இந்த திருமணம் ரூபர்ட் முர்டோக்கின் 5வது திருமணமாகும்.
ரூபர்ட் முர்டோவின் குடும்ப வரலாறு
தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்வின் பெடிர்கா புக்கர் என்ற பெண்ணை முதலில் 1956 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமான பணிப்பெண்ணான இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு அனாடெவா என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் முர்டோக் 2வதாக திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு பிரிந்தனர். மூன்றாவதாக வென்டி டங்க் என்பவரை 1999 ஆம் ஆண்டு 3வதாக மணம் முடித்தார். அவரை 2013 ஆம் ஆண்டு பிரிய 2016 ஆம் ஆண்டு ரூபர்ட்டுக்கு 4வது திருமணம் நடைபெற்றது. ஜெர்ரி ஹால் என்ற பெண்ணை மணமுடித்த நிலையில் இவர்கள் 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர். இப்படியான தன்னுடைய 5வது திருமணத்துக்கு ரூபர்ட் முர்டோக் தயாராகி வருகிறார்.