”நாய் வாழ்க்கைன்னா இதுதான்!” : நான்கு கால்களில் நடக்கும் அதிசய மனிதர்..காரணம் தெரியுமா?
அவர் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கை, கால்களால் குனிந்து தவழ்ந்தபடியே செலவிடுகிறார்.
மனிதர்கள் நாயைப் போல் வாழ்வது எப்படி இருக்கும்? நதானியேல் நோலனுக்கு அது அனுபவப் பூர்வமாகவே தெரிந்திருக்கும். 31 வயதான இவர் கடந்த ஒரு வருடமாக நாயைப் போல் தவழ்ந்து ஓடுவது, நாயின் பார்வையில் பேலன்ஸ் செய்வது என தனது தினசரியை உருவாக்கி வருகிறார். நதானியேல் புல் முழுவதும் வேகமாக ஓடி, ஒரு நாய்க்குட்டியைப் போல தனது அறையைச் சுற்றி ஏறுகிறார். அவர் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கை, கால்களால் குனிந்து தவழ்ந்தபடியே செலவிடுகிறார்.
பெர்சனல் பயிற்சியாளராக இருக்கும் அவர் தனது நான்கு கால்களிலும் நடப்பது அவரது உடலில் பல அதிசய மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறினார், மேலும் ஜிம்மிற்குச் செல்வோர் அனைவரும் இதை முயற்சிக்க அவர் பரிந்துரைக்கிறார்.
View this post on Instagram
"நான் நாய் போலவே இருப்பதாக இணையத்தில் மக்கள் பலர் பேசிக்கொள்வதை நான் பார்க்கிறேன்.பிறர் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து நான் என் வாழ்க்கையை முடிவு செய்தால் என்னை ஒரு சிறிய பொட்டிக்குள் நான் புகுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் மாகானத்தின் இண்டியானாவைச் சேர்ந்த நதானியேல் கூறியதாக பிரபல நாளிதழ் ஒன்று மேற்கோளிட்டுள்ளது.
அவர் கூறுகையில், "நான் பொது வெளியில் இருக்கும்போது, மக்கள் உண்மையில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.நான் கீழே இறங்கி பூங்காவில் வலம் வர விரும்பினால், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கும் பெரிதாக இதுபற்றிக் கவலை இல்லை" என்கிறார்.
அதிக தீவிரமான உடற்பயிற்சிகளின் போது மூட்டு வலியுடன் அவர் போராடியதாக நதானியேல் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் தனது வலிமை மற்றும் உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை மீட்டெடுக்க குறைந்த வீரியமான வழியாக இதைக் கண்டுபிடித்துள்ளார்.
இது தனது கைகளுக்கு குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சி என்று அவர் கூறுகிறார்.
"இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னுடையது. வேறு யாரும் அதைச் செய்வதை நான் பார்த்ததில்லை. நான் இன்னும் முற்றிலும் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறேன், ஆனால் ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய நேரம் ஒதுக்குகிறேன்," என்று அவர் கூறினார்.