Covid Monkeypox HIV: பாதுகாப்பற்ற உடலுறவு எதிர்வினை... ஒரே நேரத்தில் ஹெச்ஐவி, குரங்கம்மை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்!
மேலும் முன்னதாக இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்று திரும்பிய இந்நபர் அங்கு பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட நிலையில், ஒன்பது நாள்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் அவரது உடலில் தென்படத் தொடங்கியுள்ளன.
ஒரே சமயத்தில் குரங்கம்மை, கொரோனா, எச்.ஐ.வி ஆகிய மூன்று நோய்களாலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று நோய்த்தாக்குதல்களுக்கும் ஆளான முதல் நபர் இவர்தான் என முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
36 வயது நபர்
இத்தாலியைச் சேர்ந்த 36 வயதான இந்நபர் முன்னதாக களைப்பு, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்பட தொடர் அறிகுறிகளை சந்தித்துள்ளார்.
மேலும் முன்னதாக இத்தாலியில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்று திரும்பிய இந்நபர் அங்கு பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட நிலையில், ஒன்பது நாள்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் அவரது உடலில் தென்படத் தொடங்கியுள்ளன.
A 36 year old Italian man is the first person to be tested positive for Monkeypox, Covid-19 and HIV at the same time.
— Monkeypoxtally (@Monkeypoxtally) August 24, 2022
இதனைத் தொடர்ந்து முன்னதாக அவர் மருத்துவமனையை அணுகிய நிலையில், மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை, ஹெச்ஐவி மற்றும் கொரோனா ஆகிய மூன்று நோய்களாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
3 நோய்த்தாக்குதல் முதல் வழக்கு
முன்னதாக பரிசோதனையில் அந்நபர் அதிக அளவு ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தது தெரிய வந்த நிலையில், குரங்கம்மை மற்றும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
சுமார் ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து முன்னதாக வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ஒரு நபர் இந்த மூன்று நோய்த்தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ள உலகின் முதல் வழக்கு இது என மருத்துவ உலகினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய கடானியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இணை நோய்த்தொற்று, பாலியல் பழக்கவழக்கங்கள் ஆகியவை நோயைக் கண்டறிதலில் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வழக்கு காட்டியுள்ளதாகவும், குரங்கம்மை, கொரோனா அறிகுறிகள் ஒருசேர வருவதையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோமின் கருத்துப்படி, ”ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 92 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
.@WHO media briefing on #monkeypox, #COVID19 and other global health issues https://t.co/JwWQUv3Rgu
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) August 17, 2022
குரங்கம்மை வழக்குகள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே கண்டறியப்பட்டுள்ளன. குரங்கம்மை நோயை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க- Asia Cup 2022: விராட் கோலி இதை செய்தால் .. அனைவரும் வாயை மூடுவார்கள்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
மேலும் வாசிக்க- TN TRB Recruitment 2022: 1.80 லட்சம் வரை ஊதியம்; எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்