Watch Video : புலியுடன் ஒரு லாங் ட்ரைவ்..! வாகன ஓட்டிகளை அலறவிட்ட ஆசாமி - ஆவேசமான நெட்டிசன்..!
புலியுடன் ஒரு லாங் ட்ரைவ் சென்று காண்போரை அலறவிட்ட ஆசாமி ஒருவர் நெட்டிசன்களிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
புலியுடன் ஒரு லாங் ட்ரைவ் சென்று காண்போரை அலறவிட்ட ஆசாமி ஒருவர் நெட்டிசன்களிடம் வகையாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இணையத்தின் வைரல் வீடியோ என்றாலே ஏதாவது விநோதமாக இருக்கும். ஆனால் இந்த வைரல் வீடியோவில் எல்லாமே விநோதத்திலும் விநோதமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஆம் அந்த வீடியோவில் ஒரு கார் செல்கிறது. அதன் ஜன்னல் வெளியே ஒரு புலி காற்றை சிலாகித்துக் கொண்டே செல்கிறது. உள்ளே புலியின் அருகே உள்ள நபரோ அல்லது காரை ஓட்டும் நபரோ சிறித்தும் சலனமில்லாமல் செல்கின்றனர். அதைப் பார்க்கும்போது புலிக்கும் சரி, ட்ரைவருக்கும் சரி இல்லை புலியின் அருகே இருப்பவருக்கும் சரி இது முதல் பயணமில்லை என்பது தெரிகிறது. அந்த வீடியோவை @iger_tigers678 என்ற இஸ்டாகிராம் ஐடியில் பயனர் ஒருவர் பதிவு செய்துள்ளோர்.
முதலில் நீங்களும் அந்த வீடியோவைப் பார்த்து விடுங்கள்.
View this post on Instagram
என்ன வீடியோவைப் பார்த்தாகிவிட்டதா? இந்த வீடியோ எந்த நாட்டில் எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இந்தியில் ஸ்டீவ் இர்வின் ஷோவில் வரும் காட்சியைத் தழுவி இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் விலங்கியல் பூங்கா பாதுகாவலரான ஸ்டீவ் இர்வின் முதலைகள் வேட்டைக்காரர் என்றும் அறியப்பட்டார்.
ஆனால் புலியுடன் லாங் ட்ரைவ் செல்லும் இந்த வீடியோவுக்கு கீழ் நெட்டிசன்கள் பல்வேறு ரியாக்ஷன்களை இட்டுள்ளனர். ஒருவர் இது முட்டாள்தனமானது என கடிந்துள்ளார். இன்னொருவர், நீங்கள் என்ன அடிமுட்டாளா? நான் எனது நாயைக் கூட இப்படி வெளியில் தலையைக் காட்டி வர அனுமதித்தது இல்லை. ஒருவேளை காயம் ஏற்படலாம் இல்லாவிட்டால் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இன்னொரு இன்ஸ்டா பயனர், இந்தப் புலி தெருவில் பாய்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக எல்லோருமே அவருக்கு வசை பாடியுள்ளனர்.