Dating Site | ஏமாத்துறாங்க.. டேட்டிங் வெப்சைட்டில் பெண்களே இல்லைங்க.. இளைஞர் போட்ட வழக்கு என்ன?
டேட்டிங் ஆப் மட்டுமின்றி டேட்டிங் வெப்சைட்டுகளும் அசுரவளர்ச்சி அடைந்துவிட்டன.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துக்குமே செயலிகள் வந்துவிட்டன. தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே போன் என்ற நிலை மாறி இப்போது வங்கி பரிவர்த்தனைகள், பங்குச்சந்தை விவரங்கள், பண பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள் என பல தேவைகளுக்கு பயன்படத் தொடங்கிவிட்டது. அதேபோல டேட்டிங் செயலிகளும் இப்போது பல முளைத்துவிட்டன. உள்ளூர் டேட்டிங் முதல் உலகளாவிய டேட்டிங் வரை செல்போனில் செயலிகளாக வந்துவிட்டன.
ஆண், பெண் என இருபாலரும் தங்களுக்கு ஏற்ற ஒருவரை செயலியிலேயே தேடிப்பிடிக்கும் கதையைத்தா டேட்டிங் ஆப் செய்கின்றன. இந்த செயலி மூலம் புது நண்பர்களை தேடிப்பிடிக்கலாம் என்றாலும், இதில் பல சிக்கல்களும் உள்ளன. பலர் போலி ஐடிக்களை உருவாக்கி டேட்டிங் ஆப் மூலம் மோசடி செய்தும் வருகின்றனர். பணத்திருட்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்களை குறி வைத்து ஏமாற்றுதல் போன்ற குற்றச்செயல்களும் டேட்டிங் ஆப்பில் அரங்கேறி வருகிறது. டேட்டிங் ஆப் மட்டுமின்றி டேட்டிங் வெப்சைட்டுகளும் அசுரவளர்ச்சி அடைந்துவிட்டன.
இந்தியாவை விடவும், வெளிநாடுகளில் டேட்டிங் ஆப் படுவேகமாக வளர்ந்துள்ளது. டேட்டிங் ஆப் மற்றும் டேட்டிங் வெப்சைட் மூலம் காதல், திருமணம் என அடுத்தக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒரு டேட்டிங் வெப்சைட் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளார். டேட்டிங் ஆப் மூலம் அவர் ஏதும் ஏமாற்றப்படவில்லை. அதே நேரத்தில் டேட்டிங் ஆப்தான் தன்னை ஏமாற்றியதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
29 வயதான நபர் ஒரு தனியார் டேட்டிங் வெப்சைட் மீது போலீசாரில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தென்வர் டேட்டிங் கோ என்ற டேட்டிங் வெப்சைட்டில் பெண்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது. சொற்ப அளவிலான பெண்களே அந்த டேட்டிங் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். ஆனால் அதனை மறைத்து டேட்டிங் வெப்சைட் பலரையும் ஏமாற்றி வருகிறது என தெரிவித்துள்ளார். இதற்கு நஷ்ட ஈடாக 9500 டாலர்கள் கொடுக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள அந்த டேட்டிங் வெப்சைட், புதிய பயனர்களை உடனடியாக நாங்கள் உள்ளே அனுமதிக்க முடியாது. விண்ணப்பங்கள், சுயவிவரங்கள் சரிபார்க்கப்பட்டே செயலியில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிக அளவிலேயே டேட்டிங் வெப்சைட்டில் உள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால் புகாரளித்த இளைஞரோம், 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் வெறும் 5 பேர் மட்டுமே வெப்சைட்டில் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரும் என தெரிகிறது. இந்த விவகாரம் இணையத்திலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:Jail Movie Release: உலகம் முழுக்க ’ஜெயில்’ - வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா!