மேலும் அறிய

’தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’ -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!

தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் , மலாலா அமெரிக்காவில் ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அதுபற்றி அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

"9 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தாலிபான்களால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டு உண்டாக்கிய விளைவை, மருத்துவர்கள் இன்றும் என் உடலில் சரிசெய்து வருகின்றனர்” என்று எழுதியுள்ளார் சமூகப் போராளியான மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானின் கிராமப் பகுதி ஒன்றில், தாலிபான்களால் பெண் குழந்தைகளின் கல்வி மீது தடை விதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்துக் குரல் எழுப்பினார் 15 வயது சிறுமியான மலாலா. இதற்காக மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர் மருத்துவ உதவிகளுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பெண் குழந்தைகளின் கல்விக்காக, உயிரைப் பணயம் வைத்து போராடியதற்காக மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக, ஆப்கானிஸ்தானின் அரசியல் சூழல் பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த அரசு நீக்கப்பட்டு, தலைநகர் காபூல் முதல் நாட்டின் முக்கிய நகரங்கள் ஆயுதம் ஏந்திய தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆளப்பட்டது. தற்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். கடந்த முறை ஆட்சி செய்த போது, தாலிபான்கள் பெண்கள் கல்வி கற்கவும், பணியில் ஈடுபடவும் தாலிபான்கள் தடை விதித்திருந்தனர். அதன் நீட்சியாகவே, பாகிஸ்தானில் மலாலா தாலிபான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.

’தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’  -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மலாலா

தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதையடுத்து, மலாலா அமெரிக்காவில் ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதுகுறித்து விரிவாக அவர் இணைய தளம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “2012ஆம் ஆண்டு, தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் என் முகத்தில் சுடப்பட்டு, துப்பாக்கி குண்டு எனது இடது கண்ணில் உரசி, மண்டை ஓட்டில் இறங்கி மூளையைத் தாக்கியது. இதில் முகத்தின் நரம்பு துண்டிக்கப்பட்டு, செவித் திறன் பாதிக்கப்பட்டு, எனது தாடை எலும்பு உடைந்தது” என்று தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து விவரித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவுடன் மயக்கமடைந்த மலாலா, கண் விழித்த போது இங்கிலாந்தின் பிர்மிங்கம் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்துள்ளார். மருத்துவமனையின் உயர்தர சிகிச்சைகளைப் பார்த்த பிறகு, “நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது, ஒரு வேலையில் சேர்ந்து, பணம் சம்பாதித்து, போன் வாங்கி, என் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, கடுமையாக வேலை செய்து மருத்துவமனையின் கட்டணத்தைக் கட்டுவேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டதாக மலாலா கூறியுள்ளார். எனினும், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளால் குணமாகி வருகின்றார்.

’தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’  -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!
மலாலா யூசுப்சாய்

மலாலாவின் உடலில் இதுவரை 6 பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. குழந்தையைப் போல, மீண்டும் முதலில் இருந்து பேசுவது, நடப்பது எனப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளார் மலாலா.”தாலிபான்களிடம் இருந்து நான் தப்பித்துக் கொண்டேன். எனது ஆப்கானிஸ்தான் சகோதரிகள் குறித்து அச்சப்படுகிறேன்” என்றும் மலாலா கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Embed widget