Philippines earthquake : ஃபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!
Philippines earthquake : ஃபிலிப்பைன்ஸில் விகா கடலோர பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஃபிலிப்பைன்ஸின் விகா கடலோர பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 120 கிமீ (74 மைல்) தொலைவில், சுமார் 45 கிமீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (European Mediterranean Seismological Centre (EMSC)) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வடக்கு பகுதியில், காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவாக பதிவானது. பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கான், தஜிகிஸ்தான், இந்தியாவின் மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் தஜிகிஸ்தானின் முர்ஹொப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்:
ஜப்பானில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படும். ஜப்பான் பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இருப்பதால் இப்படியான சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கிறது. இது தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு செயல்பாட்டின் வளைவாகும்.
இதன் காரணமாக வலுவான நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய கட்டிடங்களை உறுதிசெய்யும் நோக்கில் கடுமையான கட்டுமான விதிமுறைகளை ஜப்பான் நாடு கொண்டுள்ளது.
இதையும் படிங்க..
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!