Lunar Eclipse : நிலா சிவப்பா இருக்கப்போகுதா? ஏன் தெரியுமா? : கிரகண ரகசியம் பகிர்ந்த நாசா
அடுத்த முழு சந்திர கிரகணம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது
நவம்பர் 8-ஆம் தேதி, இந்த ஆண்டின் இறுதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் அனைத்தும் ஒரு கோட்டில் இருக்கும்போது, பூமியின் நிழல் அதை மறைக்கும் போது சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. அடுத்த முழு சந்திர கிரகணம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த காலகட்டத்தில் புமியைச் சுற்றி இன்னும் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.
ஒரு முழுமையான கிரகணத்தின் போது, முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதியான அம்ப்ராவில் மூடப்பட்டிருக்கும். அம்ப்ராவிற்குள் இருக்கும் போது சந்திரன் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த நிகழ்வுகளின் காரணமாக, சந்திர கிரகணங்கள் அடிக்கடி "ப்ளட் மூன்" என்று குறிப்பிடப்படுகின்றன.
ரேலே ஸ்கேட்டரிங் என்பது சந்திரனை சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு நிகழ்வாகும்.நாசா இதுகுறித்துக் குறிப்பிடுகையில், "நமது வானத்தை நீலமாகவும், சூரிய அஸ்தமனம் சிவப்பு நிறமாகவும் மாற்றும் அதே நிகழ்வு சந்திர கிரகணத்தின்போது சந்திரனை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. இது ரேலே ஸ்கேட்டரிங் என்று அழைக்கப்படுகிறது. ஒளி அலைகளில் பயணிக்கிறது, மற்றும் ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளன. நீலநிறம் ஒரு குறுகிய அலைநீளம் கொண்டது அது நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியை விட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்களால் எளிதில் சிதறடிக்கப்படுகிறது."
View this post on Instagram
சந்திர கிரகணத்தின்போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து செல்வதால், சந்திரன் சிவப்பு நிறமாக மாறும். கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் அதிக தூசி தென்படும், சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது உலகின் அனைத்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போல சந்திரனில் கிரகணத்தின் போது நிகழும்" என்று நாசா தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.