Viral Video : அங்கு போர்.. இங்கு காதல்.. இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட ரஷ்யா-உக்ரைன் ஜோடி..
காதல் எல்லா எல்லைகளையும் தாண்டியது என்ற செய்தியை இவர்களது திருமணம் தற்போது நிருபித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஒரு பக்கம் முட்டிக்கொண்டிருக்க...நீங்க ஒரு பக்கம் சண்டை செய்யுங்க, நாங்க காதல் செய்யுறோம் என்னும் கதையாக ஒரு ஜோடி போருக்கு நடுவே அழகானதொரு காதல் திருமணத்தை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மூளும் நிலையில், காதல்தான் அனைத்தையும் வெல்லும் என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது. காதல் எல்லா எல்லைகளையும் தாண்டியது என்ற செய்தியை இவர்களது திருமணம் தற்போது நிருபித்துள்ளது. செர்ஜி நோவிகோவ் என்ற ரஷ்ய நபர் தனது உக்ரைன் காதலியான எலோனா பிரமோகாவை ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மஷாலாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Russian boy marries Ukrainian girlfriend in Dharamshala, Himachal Pradesh
— Being Himachali (@BeingHimachali) August 4, 2022
Sergei Novikov, originally from Russia but settled in Israel, married Ukrainian girlfriend Elona Bramoka following traditional Hindu rituals. pic.twitter.com/nTlDbL7Npf
இஸ்ரேலில் குடியேறிய நோவிகோவ், உக்ரைனைச் சேர்ந்த தனது காதலியான எலோனா பிரமோகாவை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா அருகே உள்ள திவ்யா ஆசிரம கரோட்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்து சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விழாவில் ஏராளமான உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டனர் மற்றும் இமாச்சலி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நடனமாடி புதுமணத் தம்பதிகளை அவர்கள் வாழ்த்தினர்.
மணமக்கள் இருவரும் பாரம்பரிய வட இந்திய உடைகளை உடுத்தி நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடுவே திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
’இத்தனைக்கும் நடுவே ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்கிற எழுத்தாளர் பிரபஞ்சனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன