Crime : துப்பாக்கிச் சூடு.. பாலியல் வன்கொடுமை.. உடல் பாகங்களை தின்று பிரபலமான கொடூர மனிதன்.. என்ன நடந்தது?
கழுத்தில் சுட்டு, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரது உடலின் பாகங்களை பல நாட்களாக வைத்து சாப்பிட்ட சர்ச்சை மனிதர் சாகாவா உயிரிழந்தார்.
நெதர்லாந்து மாணவியை கொலை செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி அவரின் உடல் பாகங்களை பல நாள்களாக வைத்து சாப்பிட்டு, பின்னர் பிரபலமான இஸ்ஸெய் சகாவா மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 73.
கடந்த நவம்பர் 24 அன்று சாகாவா நிமோனியாவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடந்த 1981 இல் பாரிஸில் படித்துக்கொண்டிருந்தபோது, டச்சு மாணவர் ரெனி ஹார்ட்வெல்ட்டை தனது வீட்டிற்கு அழைத்தார் சாகாவா. கழுத்தில் சுட்டு, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரது உடலின் பாகங்களை பல நாட்களாக வைத்து அவர் சாப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள அவரது உடல் எச்சங்களை போயிஸ் டி பவுலோன் பூங்காவில் சகாவா அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பின்னர், கைது செய்யப்பட்டு பல நாட்களுக்குப் பிறகு போலிஸில் அவர் வாக்குமூலம் அளித்தார். இருப்பினும், அவர் 1983 இல் பிரெஞ்சு மருத்துவ நிபுணர்களால் விசாரணைக்கு தகுதியற்றவராகக் கருதப்பட்டார். ஆரம்பத்தில் 1984 இல் ஜப்பானுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்டார்.
"கொலைகாரனை ஒருபோதும் விடுவிக்க விட மாட்டோம்" எனக் கூறி, ஜப்பானில் சாகாவாவின் வழக்கு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க போவதாக கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பம் தெரிவித்தது.
"Kobe Cannibal" dies of pneumonia.
— AFP News Agency (@AFP) December 2, 2022
Issei Sagawa, a Japanese man who killed and ate a Dutch student in Paris but was never jailed, has died aged 73https://t.co/CXX65ZdKm6 pic.twitter.com/CCRVQR5mZm
ஆனால், ஜப்பானுக்கு சாகாவா சென்ற பிறகு, அவர் மனநல பாதிக்கப்பட்டவர் என ஜப்பான் மருத்துவர்கள் கூறினர். ஒரே பிரச்னை அவரின் வித்தியாசமான குணம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே, அவரை மருத்துவமனையில் அடைக்க வேண்டாம் என்றும் கூறினர்.
ஜப்பானிய அதிகாரிகளால் அவரது வழக்குக் கோப்புகளை பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து பெற முடியவில்லை. இதனால். அவர்கள் வழக்கு முடிக்கப்பட்டதாக நம்பி கொலையாளி சாகாவை விடுவித்தனர்.
சாகாவா தனது குற்றத்தை மறைக்கவில்லை. அதே சமயத்தில் தனது பிரபலத்தை அவர் பயன்படுத்தி கொண்டார். "இன் தி ஃபாக்" என்ற தலைப்பில் ஒரு அவர் நாவலை எழுதினார். அதில், கொலையைப் பற்றி விவரங்களை அவர் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
அவர் செய்தது கொடூரமான கொலையாக இருந்தபோதிலும், அதில் அவர் சிறிதளவு கூட குற்ற உணர்ச்சியாக உணரவில்லை. விடுவிக்கப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அவர் நேர்காணல்களை வழங்கினார்.
பெண்களை நிர்வாணமாக வரைந்ததற்காக பிரபல பத்திரிகையின் கவர் ஸ்டோரியில் இடம்பெற்றார். 18+ படம் ஒன்றிலும் நடித்துள்ளார். மேலும், ஒரு ஜப்பானை மையமாக கொண்டு எடுக்கப்படும் மாங்கா காமிக் புத்தகத்தை உருவாக்கினார். அதில், அவரது குற்றம் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றிருந்தது.