Johnson & Johnson : கேன்சர் குற்றச்சாட்டுகள்.. 2023 முதல் நிறுத்துறோம்.. அறிவித்த ஜான்சன் & ஜான்சன்.. ஏன்?
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகள் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ளதால் இத்தகைய முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில், ஜான்சன் & ஜான்சன் தனது டால்க் பேபி பவுடரை அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் டால்க் பேபி பவுடரில் 'ஆஸ்பெஸ்டாஸ்' என்ற கனிம பொருள் இருப்பதாகவும், இதன் மூலம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வந்ததாகவும் இந்நிறுவனத்தில் மீது கிட்டத்தட்ட 34, 000 வழக்குகள் பதிவாகியது. இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் எந்தவொரு தீங்கும் இல்லை என்று நிறுவனம் தொடர்ந்து தெரிவித்த நிலையில், தற்போது அந்த நிறுவனமே டால்க் பேபி பவுடரை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
Breaking Johnson & Johnson to end sales of talcum powder around the world. They say it’s because of the misinformation but maybe it’s because of the millions if not billions they will end up paying out and already are paying out for victims with cancer or surviving family members pic.twitter.com/g6eQ0mXQS6
— Erin Elizabeth Health Nut News (@unhealthytruth) August 12, 2022
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டால்க் அடிப்படையிலான பவுடர்களில் இருந்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதில், "உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அனைத்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் போர்ட்ஃபோலியோவிற்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த மாற்றத்தின் விளைவாக, டால்க் அடிப்படையிலான ஜே&ஜே பேபி பவுடர் 2023 இல் உலகளவில் நிறுத்தப்படும்." என்று தெரிவித்திருந்தது.
Famous Johnson & Johnson to stop selling baby powders pic.twitter.com/vO5BiwJCRF
— Jinnah Today (@jinnahtoday) August 12, 2022
மேலும், "எங்கள் அழகுசாதன டால்க்கின் பாதுகாப்பு குறித்த எங்கள் நிலைப்பாடு இன்றும் மாறாமல் உள்ளது. டால்க் அடிப்படையிலான ஜே&ஜே பேபி பவுடர் பாதுகாப்பானது. அதில், அஸ்பெஸ்டாஸ் இல்லை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்துவோம். உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களின் பல அறிவியல் ஆய்வுக்கு பிறகு அது பாதுகாப்பானது என்று நாங்கள் உறுதி செய்வோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்