John Cena:பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த ஜான் சீனா - காரணம் இதுதான்..!
John Cena: அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருக்கும் புகைப்படத்தினை உலக குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
John Cena: அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருக்கும் புகைப்படத்தினை உலக குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது, இன்ஸ்டாகிராம் மட்டுமில்லாமல் அனைத்து சமூக வலைதளத்திலும், வைரலாகி வருகிறது.
குறிப்பாக அந்த படத்தில் பிரதமர் மோடி தனது கையை முகத்தின் முன்பு அசைப்பது போல உள்ளது. டபுள்யூ.டபுள்யூ.இ. வீரர் ஜான் சீனா தான் குத்துச்சண்டை போட்டியின் போது எதிராளியை வீழ்த்திய பின்னர் தனது கையைக் கொண்டு முகத்தின் முன்பு அசைப்பார். தனது சைகை போலவே பிரதமர் மோடி செய்வது போல இருக்கும் இந்த புகைப்படத்தை ஜான் சீனா பகிர்ந்து, “ பிரதமர் மோடியும் தனது கையை முகத்தின் முன்பு வைத்திருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு ரசிகரான சீனா:
மேலும், இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை அள்ளித்தெளித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர், "ஒரு இந்தியனாக... அவர் ஜான் சினா ரசிகர் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "சீனா இந்தியாவிற்கு ரசிகராகிவிட்டார்" என்று எழுதியுள்ளார்.
மொத்தம் மூன்று நாள் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, நேற்று மாலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டு அமர்வில் இது அவரது இரண்டாவது உரையாகும். முன்னதாக, 2016ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வழங்கும் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடிக்கு பரிசு:
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும் பரிசுகள் குறித்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கைகளால் தயாரிக்கப்பட்ட பழமையான அமெரிக்க புத்தக கேலரியை வழங்கினர். இதனுடன், 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விண்டேஜ் அமெரிக்க கேமராவையும் ஜனாதிபதி பைடன் வழங்கியுள்ளார். மேலும், ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவுக்கான காப்புரிமை பற்றிய பதிவும் வழங்கப்ட்டுள்ளது.
தொடர்ந்து, ஜோ பைடன் சார்பில் அமெரிக்க வனவிலங்கு புகைப்படம் பற்றிய ஹார்ட்கவர் புத்தகமும், ஜில் பைடன் சார்பில் ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதைகளின் முதல் பதிப்பின் புத்தகமும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில், எலன் மஸ்க், ட்விட்டர் சி.இ.ஓ சுந்தர் பிட்சை உள்ளிட்ட பலரையும் பிரதமர் மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மூன்று நாள் பயணத்தினை முடித்த பின்னர், எகிப்து நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.