தொடர் பதற்றம்... பைடன் குடும்பத்திற்கு குறி... பட்டியல் போட்டு பழிவாங்கும் ரஷ்யா?
ரஷ்ய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக ரஷ்யா செல்வதற்கு 25 அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உள்பட 25 பேர் ரஷ்யா செல்வதற்கு அந்நாடு தடை விதித்து உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக ரஷ்யா செல்வதற்கு 25 அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
Russia places entry ban on Biden’s wife, daughter https://t.co/zO5fdip2Vg
— Daily Post Nigeria (@DailyPostNGR) June 28, 2022
மைனை சேர்ந்த சூசன் காலின்ஸ், கென்டக்கியை சேர்ந்த மிட்ச் மெக்கானெல், அயவாவை சேர்ந்த சார்லஸ் கிராஸ்லி, நியூயார்க்கின் கிர்ஸ்டன் கில்லிபிரான்ட் உட்பட பல அமெரிக்க செனட்டர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
அதுமட்டுமின்றி, பல பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க அரசின் முன்னாள் அலுவலர்கள் ஆகியோரும் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக ஒழுங்கையே மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக, மேற்குலக நாடுகள் யாவும் ரஷ்யாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன. ரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க தொடுத்த போரின் விளைவால் மக்கள் கடுமையாக பாதிக்கட்டனர். போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலைமையுடன் இருந்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவை கண்டிக்கும் விதமான தீர்மானத்தில் நடுநிலைமையே வகித்தது. மேற்குலக நாடுகளின் தலைவர்கள், இந்தியாவை தங்கள் பக்கம் இழக்க பல முயற்சிகளை செய்திருந்தாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இதற்கு மத்தியில், அமெரிக்க, ரஷிய நாடுகள் போட்டி போட்டு கொண்டு பரஸ்பரம் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்