Video Amazon Office: ”பெரிய விஷயங்களுக்கெல்லாம் சின்ன விஷயங்கள்தான் முதல்படி" : அமேசான் ஆஃபீஸ் இப்படிதான் இருந்துச்சு..
விண்வெளிக்கு மக்களை அழைத்து செல்ல தேவையான வகையில் ராக்கெட் மற்றும் திரும்பி பூமிக்கு வர உதவும் கேப்சூல் ஆகியவற்றை ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்து வந்தது.
வெளிநாட்டினர் மத்தியில் தற்போது விண்வெளி பயணம் என்பது ஒரு வாடிக்கையாக அமைந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான ஜெஃப் பெசோஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்வெளி பயணம் சென்று திரும்பினார். இதற்காக அவருடயை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ ஸ்பேர்டு ராக்கெட் கேப்சூல் மூலம் விண்வெளிக்கு சென்று வந்தார்.
அதனை அடுத்து கடந்த 10 மாதங்களில் இந்த நிறுவனம் மூன்று முறை விண்வெளி பயணங்களை மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நான்காவது முறையாக கடந்த மார்ச் மாதம், ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் வின்வெளிக்கு சென்று வந்திருக்கிறது. இம்முறை 6 பேர் கொண்ட குழு, வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பியுள்ளது. இந்த பயணத்தின் வீடியோவை ஜெஃப் பெஸோஸ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
முன்னதாக, விண்வெளிக்கு மக்களை அழைத்து செல்ல தேவையான வகையில் ராக்கெட் மற்றும் திரும்பி பூமிக்கு வர உதவும் கேப்சூல் ஆகியவற்றை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிறுவனம் தயாரித்த ராக்கெட் மற்றும் கேப்சூல் முதல் முறையாக கடந்த ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்டது. இது குறித்து அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெரிய விஷயங்களுக்கெல்லாம் சின்ன விஷயங்கள்தான் முதல்படி என கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கும் பெஸோஸ், இந்த வீடியோவுடன் அமேசான் நிறுவனத்தின் ஆரம்பகால புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், பழைய கட்டடம் ஒன்றில் ‘அமேசான்.காம்’ என ஸ்ப்ரே பெயிண்ட்டால் எழுதப்பட்டிருக்கும் அறையில் அமேசான் தொடங்கப்பட்டதாகவும், இப்போது உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக வளர்ந்து நிற்பதையும் சுட்டி காட்டியிருக்கிறார் அவர்.
ப்ளூ ஆர்ஜின் மூலம் எப்படி விண்வெளி சுற்றுலா செல்ல முடியும்?
இந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விரும்புவர்கள் டிக்கெட்டிற்கு ஏலம் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டிக்கெட் ஏலத்தில் ஒரு டிக்கெட்டை ஒருவர் 29 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து, ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் சார்பாக விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்