Guinness World Record: ஓடும் காரில் 1 நிமிடத்தில் டயர் மாற்றம்.. கின்னஸ் சாதனை படைத்த இத்தாலியர்கள்
ஓடும் காரில் 1 நிமிடத்தில் டயரை மாற்றி, இத்தாலியர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்
கின்னஸ் உலக சாதனை:
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர்கள், ஓடும் காரின் டயரை மாற்றி, கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர். ஓடும் காரிலிருந்த டயரை, சரியாக 1 நிமிடம் 17 விநாடிகளில் மாற்றி இச்சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைப் போட்டியில், கார் ஓட்டுநரான மானுவல் ஜோல்டன் மற்றும் டயரை மாற்றுவரான கியான்லுகா ஃபோல்கோ ஆகியோர் கின்னஸ் சாதனை நினைத்தனர். அதையடுத்து 1 நிமிடம் 17 விநாடிகளில் காரில் சக்கரத்தை அதிவேகமாக மாற்றிய இச்சாதனை படைத்தனர்.
ஜன்னலுக்கு வெளியே தொங்கியபடி:
இவர்கள் படைத்த சாதனை வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், மானுவல் காரை ஒரு சாய்வு பாதையில் ஓட்டி, சாமர்த்தியமாக இரண்டு சக்கரங்களில் ஓட்டுகிறார். அப்போது கார் நகரும் போது, ஜன்னலுக்கு வெளியே தொங்கியபடி, காரின் டயரை கியான்லுகா திறமையாக விரைவாக மாற்றினார்.
தமிழ்நாட்டினர் சாதனை:
இதற்கு முன்னதாக, ஒரு டயர்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய மற்றொரு அசாதாரண உலக சாதனையை, தமிழ்நாட்டைச் சேர்ந்த்வர், மூக்கின் மூலம் லாரியின் டியூப்பை ஊதிப் பெரிதாக்கினார்.
அதனை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளருமான நடராஜ், 9 நிமிடம் 45 விநாடிகளில் மூன்று லாரி டியூப்களை ஊதி 98-வது சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மூக்கினால் டயர் டியூப்களை ஊதிப் பெரிதாக்குவதை, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் யாரும் முயற்சிக்க வேண்டாம் என யோகா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Also read: Viral Video: மோப்ப நாய்க்கு மாஸான கூலிங் க்ளாஸ்.. கலக்கல் ஷூ; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்