10 வயதில் பலகோடிக்கு அதிபர்: உலகின் மிகக் குட்டி கோடீஸ்வர சிறுவன்!
ஒரு வீட்டை உங்களுக்கே உங்களுக்கென சொந்தமாக வைத்திருப்பது எப்போதும் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும்
பத்து வயது குட்டிச் சிறுவன் பலகோடிக்கு அதிபதியாக இருக்க முடியுமா? ரிச்சி ரிச் கதாப்பத்திரம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? அதற்கு பதில்தான் நைஜீரியாவின் 10 வயது குட்டிப் பணக்க்காரச் சிறுவன் மாம்ஃபா ஜூனியர். உலகின் மிக இளைய கோடீஸ்வரனாக இருந்த சிறுவன் கருதப்படுகிறான்.
மாம்ஃபா ஜூனியருக்கு வயது வெறும் 10. ஆனால் தனது ஆறு வயதில் முதல் மாளிகையை வாங்கினார். மேலும் குஸ்ஸி , வெர்சேஸ் போன்ற டிசைனர் ஆடைகளை அணிந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இணையப் பிரபலம் இஸ்மாலியா முஸ்தபா அல்லது 'மோம்பா சீனியர்' என்பவரின் மகன்.
.அவருக்கு அந்த மாளிகையை பரிசளித்த அவரது தந்தை, தனது செல்ல மகனுக்கு பிறந்தநாள் பரிசைக் கொட்டிக் கொடுத்துள்ளார்.
அது குறித்து அவர் கூறுகையில், "ஒரு வீட்டை உங்களுக்கே உங்களுக்கென சொந்தமாக வைத்திருப்பது எப்போதும் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, பணத்தால் அளவிட முடியாது. வீட்டு உரிமை என்பது வாழ்க்கையின் அன்றாட நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஒரு உணர்வு. அனைத்து ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகும் நீங்கள் செல்ல ஒரு இடம் உள்ளது... உங்களை ஒருபோதும் நியாயந்தீர்க்காத மற்றும் எப்போதும் உங்களை திறந்த கையுடன் அழைக்கும் இடத்திற்கான உத்தரவாதத்தை உங்களுக்கு இது வழங்குகிறது” என்றார்.
View this post on Instagram
"மாம்ஃபா முதலீடுகளுக்குள் நுழைவதற்கு முன்பு லாகோஸில் உள்ள ஒரு பணியகம் மாற்றும் வணிகத்திலிருந்து பணம் ஈட்டியதாக நம்பப்படுகிறது.
மகனுக்கு 10 வயதாக இருந்தபோதிலும், ஜூனியரின் அப்பா, அவர் தனது நிலுவைத் தொகையைச் செலுத்தி தனது மாளிகையை தனக்கே சொந்தமாக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.
மற்றபடி ஜூனியர் மாம்ஃபாவிற்கு பாத்திமா என்கிற குட்டி கோடீஸ்வர தங்கையும் உள்ளார்.
View this post on Instagram