பெண்கள் மட்டும் நுழையும் காடு - எங்கே உள்ளது தெரியுமா?
ஒரு காட்டு பகுதிக்குள் பல ஆண்டுகளாக பெண்கள் மட்டும் நுழைய அனுமதி உள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப்பகுதி மிகவும் ரம்மியமாக அமைந்து இருக்கும். இந்த இயற்கை சூழலை பார்க்க நம் அனைவருக்கும் அவ்வளவு பிடிக்கும். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு காடுகள் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளன. அப்படி ஒரு காட்டை நீண்ட நாட்களாக பெண்கள் மட்டும் நுழைந்து பாதுகாத்து வருகின்றனர். அப்படி அந்த காட்டில் சிறப்பு என்ன?
இந்தோனேஷியா நாட்டு இயற்கை எழில் கொண்ட நாடு. இங்கு இருக்கும் தீவுகளில் அதிகளவில் காடுகள் மற்றும் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளன. அப்படி பப்புவா என்ற காடு இந்தோனேஷியாவில் அமைந்துள்ளது. இந்த காட்டு பகுதியின் சிறப்பு என்ன வென்றால் இந்த காட்டிற்கு பழங்குடியின பெண்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது.
அதிலும் குறிப்பாக அவர்கள் இக்காட்டிற்குள் நுழையும் போது ஆடைகள் எதுவும் அணிந்து இருக்க கூடாது. இந்த நடைமுறை அங்கு பல ஆண்டு காலங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்தக் காட்டிற்குள் தப்பி தவறி ஆண்கள் நுழைய முயற்சி செய்தால் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இந்தோனேஷிய ரூபியா மதிப்பில் 1 மில்லியன் அபராதாமாக விதிக்கப்படும். அதாவது 69 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பழங்குடியினர் நீதிமன்றத்தில் கடும் தண்டைனையும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கோபத்தின் விலை ரூ.23 லட்சம்.. பிரேக் அப் செய்த காதலன்; காஸ்ட்லி பைக்கை எரித்த கடுப்பு காதலி..!
இந்த காட்டிற்குள் பெண்கள் சென்று அங்கு இருக்கும் கிளாம்ஸ் என்ற சிப்பி சார்ந்த உணவு பொருள் அங்கு கண்டு எடுத்து வருகின்றனர். இந்த கிளாம்ஸை பெண்கள் விற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். இந்த காடு தொடர்பாக பிபிசி தளம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளது. அதில் பழங்குடியின பெண் அட்ரியானா மெராட்ஜே, “இந்த காட்டிற்குள் பெண்கள் மட்டுமே நுழைய முடியும். ஆண்கள் நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும். இந்த காட்டிற்குள் நுழையும் போது நாங்கள் நிம்மியதாக இருப்போம். ஏனென்றால், இங்கு ஆண்கள் இருக்க மாட்டார்கள் இதனால் நாங்கள் எங்களுடை கதைகளை பேசி மகிழ்வோம். இந்த காட்டிற்குள் செல்லாமல் ஒருநாள் கூட எங்களால் இருக்க முடியாது. தினமும் இங்கு வந்து கிளாம்ஸை எடுத்து வந்து சந்தையில் விற்போம்” எனக் கூறியுள்ளார்.
எனினும் இந்த காட்டிற்குள் சமீபத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் எண்ணெய் நிறுவனங்கள் காட்டு பகுதியில் உள்ள வளங்களை சுரண்டி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆகவே இந்த காட்டுப்பகுதியை காக்க வேண்டும் என்பதே இந்த பழங்குடியின மக்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பசிபிக் கடல் மற்றும் இமயமலை மீது ஏன் விமானங்கள் பறப்பதில்லை : காரணம் தெரியுமா?