மேலும் அறிய

Singapore: சிங்கப்பூரில் கைமாறும் அதிகாரம்.. அதிபராக இன்று பதவியேற்கும் தமிழர் தர்மன் சண்முகரத்னம்

அண்டை நாடான இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக இன்று பதவியேற்கிறார்.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி, சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் திகழ்வதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபராக பதவியேற்கும் தமிழர் தர்மன் சண்முகரத்னம்:

அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல் ஆணையம் அறிவித்தது. சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம், இன்றுடன் முடிவடைகிறது. இந்த சூழலில், இன்று சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்கிறார். 

அண்டை நாடான இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவரது வயது 68 ஆகும். 2011 முதல் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராக பணியாற்றி வருபவர்.  சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான இறையான்மை செல்வ நிதியின் துணைத்தலைவர், பொருளியில் வளர்ச்சி கழகத்தின் ஆலோசனை மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2019ஆம் ஆண்டு மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைளை வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

ஜூரோங் தொகுதியில் இருந்து இதுவரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 66 வயதான தர்மன் சண்முகரத்னம் தனது 22 ஆண்டுகால அரசியல் பயணத்தில் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், சமூதாய கொள்கைகளுக்கான  ஒருங்கிணைப்பு அமைச்சராகவும்  பதவி வகித்து வந்தார். 

சிங்கப்பூரில் கைமாறும் அதிகாரம்:

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, மக்கள்  செயல் கட்சியில் இருந்தும் விலகி உள்ளார். தர்மனின் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கு பேரிழப்பு என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருந்தார்.  

66 வயதான தர்மன் சண்முகரத்னம் 1957ஆம் ஆண்டு பிறந்தார்.  இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிங்கப்பூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையில் முடித்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இளங்களை பொருளியில் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொளியல் பட்டமும் பெற்றார்.  

பின்பு, சிங்கப்பூரின் நாணய ஆணையத்தில் தனது பணியை தொடங்கினார். அங்கு தலைமைப் பொருளாதார நிபுணர் ஆனார்.  இதனை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி சார்பில்  போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

Ujjwala Yojana Scheme: உஜ்வாலா திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Embed widget