China's Entry: பாகிஸ்தானை சிதறடிக்கும் இந்தியா.. பதறும் சீனா வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுமா.?
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவும் பதற்றமடைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா.?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டு சீனாவும் பதற்றத்தில்தான் உள்ளது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதனால், ஒரு அறிவிப்பை சீனா தற்போது வெளியிட்டுள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம்
காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, 26 பேரை கொன்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது.
இந்த நிலையில், எல்லைப் பகுதியல் பாகிஸ்தான் அத்துமீறி பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இருநாட்டு ராணுவத்திற்கிடையே கடும் தாக்குதல் நடந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்குமாறு பல்வேறு நாடுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்திய-பாகிஸ்தான் போரால் பதறும் சீனா வெளியிட்ட அறிவிப்பு என்ன.?
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க, அதாவது சமரசத்திற்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் சூழல் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது சீனா. அதோடு, நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், நிதானம், அமைதி, பொறுமை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இரு நாடுகளுக்கும் தெரிவித்துவிட்டோம் என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இந்த நிலை எப்போதும் தொடரும், இவ்விரு நாடுகளும் சீனாவின் அண்டை நாடுகளும் ஆகும் என்று சீனா கூறியுள்ளது. மேலும், அனைத்து வகையான பயங்கரவாத்தையும் எதிர்க்கிறோம் என்றும், உலக நாடுகளுடன் இணைந்து சீனா செயல்பட இருப்பதாகவும், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போரால் சீனா பதறுவது ஏன்.?
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ பலங்களை ஒப்பீடு செய்தால், இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும். அதனால், முழுமையான போர் ஏற்படும் சூழலில், பாகிஸ்தானில் சேதங்கள் அதிக அளவில் ஏற்படும். இங்குதான் சீனாவிற்கு பதற்றமே.. ஏனெனில், பாகிஸ்தானில் கோடிக்கணக்கான ரூபாயை சீனா முதலீடு செய்துள்ளது. அப்படி இருக்கையில், சேதம் அதிகமானால் சீனாவின் முதலீடு அனைத்தும் வீணாகிவிடும் என்று சீனா கருதுகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுவரை, சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா அங்கு முதலீடு செய்துள்ளது. இது இல்லாமல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்காகவும் பெருமளவிலான முதலீட்டை செய்துள்ளது. இதனால், மத்திய ஆசியாவை சாலை வழியாக இணைக்கும் சீனாவின் கனவுத் திட்டம் வீணாவதை அந்நாடு விரும்பாது.
இதனால் தான், தற்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்கத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.





















