மேலும் அறிய

"இதெல்லாம் தேவை இல்லாதது" பன்னூன் விவகாரம்.. இந்தியாவுக்கு குடைச்சல் தரும் அமெரிக்கா!

தன்னை கொல்ல இந்திய அரசு சதி திட்டம் தீட்டியதாக பன்னூன் தொடர்ந்த வழக்கில் இந்திய அரசுக்கு நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னூன் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பியது முற்றிலும் தேவையற்ற ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றி எரியும் பன்னூன் விவகாரம்:

சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய இந்தியா முயற்சித்ததாக கடந்தாண்டு வெளியான செய்தி உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தன்னை கொல்ல இந்திய அரசு சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னூன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 21 நாள்களில் பதில் அளிக்க இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ரா ஏஜென்ட் விக்ரம் யாதவ் மற்றும் இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

இந்திய, அமெரிக்க உறவில் விரிசலா? 

இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த பிரச்னைகள் முதலில் எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, ​​நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு உயர்மட்டக் குழு விசாரணை செய்து வருகிறது.

முற்றிலும் தேவையற்ற ஒன்று. எங்கள் நிலைபாட்டை இது மாற்றாது. இந்த வழக்கை தொடர்ந்த நபரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னூனின் வரலாறு நன்கு அறியப்பட்டதாகும். அவர் ஒரு சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர்.

சீக்கியர்களுக்கான நீதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் பன்னூன். இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சை பேசி வருகிறார். மிரட்டல்களை வெளியிடுகிறார். 2020ல் அவரை தீவிரவாதியாக இந்தியா அரசு அறிவித்தது" என்றார்.

இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் புகழ்பெற்ற பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சதி திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக சதி திட்டத்தை தீட்டியவர்களே அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையா அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அவர்களின் திட்டத்தை முறியடித்தார்களா என்பது குறித்து தெரியவில்லை என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump on China:
Trump on China: "நாங்க ரெண்டு பேரும் இப்போ க்ளோஸ்" - சீனா குறித்து டிரம்ப் போட்ட அதிரடி பதிவு: ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget