Hurun Global Rich List: மும்பையில் 66, டெல்லியில் 39, பெங்களூருவில் 29.. இந்தியாவில் எங்கெங்கு எத்தனை பில்லியனர்கள்?
ஹூருன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளார்.
2023 ஹுருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியலில் மும்பையில் 66 பில்லியனர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து புது டெல்லியில் 39 பில்லியனர்கள் மற்றும் பெங்களூரில் 21 பில்லியனர்கள் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சர்வதேச அளவிலான பணக்கார டாப் 10 பில்லியன்ர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் ஆவார். ஹூருன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 82 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளார்.
ரியல் எஸ்டேட் குழுவான M3M உடன் இணைந்து ஆராய்ச்சி தளமான ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் படி, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உலகளவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது பங்கானது இந்தாண்டு 20 சதவிகிதம் சரிந்த போதிலும் 82 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசிய அளவிலும் முதலிடத்தில் இருக்கிறார்.
சரிந்த அதானி:
இந்தாண்டு 35 சதவீத சொத்து சரிவுடன் கெளதம் அதானி ஆசிய அளவிற்கு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவரது தற்போதைய சொத்து மதிப்பானது 53 பில்லியன் ஆகும். ஹூருன் படி, அதானி கடந்த ஆண்டை விட ஒவ்வொரு வாரமும் 3,000 கோடி ரூபாய் இழந்துள்ளது.
மற்ற இந்திய கோடீஸ்வரர்களில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த சைரஸ் பூனவல்லா 27 பில்லியன் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் 26 பில்லியன் நிகர மதிப்புடன் நான்காவது இடத்தையும், லட்சுமி மிட்டல் 20 பில்லியன்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 1 பில்லியன் அல்லது அதற்கு மேல் சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில், 2023 M3M Hurun Global Rich List இல் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 18 தொழில்கள் மற்றும் 99 நகரங்களில் இருந்து 176 புதிய முகங்கள் அறிமுகமாகியுள்ளது. இதில், இந்தியா 16 பில்லியன்களை சேர்த்து ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 16 புதிய இந்தியர்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து புதிய பணக்காரர் ரேகா ராகேஷ் ஜுன்ஜுன்வாலா & குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
2023 ஹுருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியலில் மும்பையில் 66 பில்லியனர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து புது டெல்லியில் 39 பில்லியனர்கள் மற்றும் பெங்களூரில் 21 பில்லியனர்கள் உள்ளனர்.
பில்லியனர்களின் எண்ணிக்கை சரிவு:
ஹூருன் பட்டியல்படி, கடந்த ஆண்டு 3384 பேராக இருந்த பில்லியனரின் எண்ணிக்கை, இந்தாண்டு 3112 ஆக குறைந்துள்ளது. 2479 பேரின் சொத்து மதிப்பு சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.
டாப் பில்லியர்ன்களாக இருந்த அமேசானின் தலைவர் ஜெப் பெசோஸ் சொத்தானது 70 பில்லியன் சரிவை கண்டு. தற்போது 118 பில்லியனாக உள்ளது. அதேபோல், டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனத்தில் சி.இ.ஓ எலன் மஸ்க் சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலராக குறைந்து, 157 பில்லியன் டாலராகவும் உள்ளது.