இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: முஸ்லீம் ஆணுடன் திருமணம்: பாகிஸ்தானில் பதற்றம்
ஏற்கெனவே 15 வயது இந்து பெண் ஒருவர் 50 வயது முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, ஒரு முஸ்லீம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் அதிகாரிகள் சிறுமியை காப்பாற்றியுள்ளனர். பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் சிறு வயதுக்குட்பட்ட இந்துப் பெண்களைக் கடத்துவது, கட்டாய மதமாற்றம் செய்வது மற்றும் திருமணம் செய்வது போன்ற பிரச்சனைக்குரிய போக்கை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
இதுகுறித்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடும் என்ஜிஓ அமைப்பான பாகிஸ்தான் தாராவர் இட்டேஹாட்டின் தலைவர் ஷிவா கச்சியின் கூறுகையில், “ஏற்கெனவே 15 வயது இந்து பெண் ஒருவர் 50 வயது முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவளை இன்னும் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதி கேட்கும் போது நீதிமன்றத்தில் சில காவல்துறை அதிகாரிகள் போலி ஆவணங்களை உருவாக்கி அடிக்கடி தீயவர்களுக்கு துணை போகின்றனர்” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் மிர்புர்காஸில் உள்ள கோட் குலாம் முஹம்மது கிராமத்தில் 10 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளார். சிறுமி தனது வீட்டிற்கு வெளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு சிர்ஹண்டி ஏர் சமரோ செமினரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஷாஹித் தல்பூர் என்ற நபருடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 15 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகவும், அவரை கடத்தியவர்கள் அவருக்கு 20 வயது என்று போலி திருமணம் மற்றும் மதமாற்றச் சான்றிதழ்களை தயாரித்து அளித்திருப்பதும் தெரிய வந்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், 14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, ஒரு முஸ்லீம் நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். சிந்துவின் பெனாசிராபாத் மாவட்டத்தில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் துப்பாக்கி முனையில் அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிய நீதிமன்றம் அவளை பெற்றோரிடம் அனுப்ப மறுத்தது. சிறுமியின் எதிர்ப்பு மற்றும் அவளை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்து மற்றொரு வழக்கில், சிந்துவின் ரோஹ்ரி நகரத்தைச் சேர்ந்த ஒரு இந்து பெண் உள்ளூர் லஷாரி பழங்குடியினரின் கடத்தல் மற்றும் மதமாற்ற முயற்சியை எதிர்த்ததற்காக கொல்லப்பட்டார். காவல்துறையினரிடம் இருந்து தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.