மேலும் அறிய

Highest Paid CEO: 4 மாதங்கள்! 827 கோடி சம்பளம்... உலகின் பணக்கார CEO இவர் தான்

Highest Paid CEO : பிரையன் நிக்கோல் நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இந்த நான்கு மாதங்களில் மட்டும் அவர் நிறுவனத்திடம் இருந்து $96 மில்லியன் பெற்றுள்ளார்.

ஆப்பிளின் தலைமை இயக்குனர் டீம் குக் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பெரும் சம்பளம் பெறுகின்றனர். அவரது ஆண்டு சம்பளம் சுமார் 75 மில்லியன் டாலர்கள். ஆனால் இவர்களின்  சம்பளத்தின் உச்சத்தைத் தாண்டியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல்.

பிரையன் நிக்கோல்: 

பிரையன் நிகோல் நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இந்த நான்கு மாதங்களில் மட்டும் அவர் நிறுவனத்திடமிருந்து $96 மில்லியன் (சுமார் ரூ. 827 கோடி) பெற்றுள்ளார், இதில் பங்கு விருதுகள், அவரது சுற்றுப்பயணங்கள் மற்றும் இதர செலவுகளும் அடங்கும். லைவ் மின்ட்டின் அறிக்கையின்படி, பிரையன் நிக்கோலின் வருடாந்திர வருமானம் $113 மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரையன் நிக்கோலின் சம்பளத்தில் 94 சதவீதம் பங்குகளில்  இருந்து வருகிறது. இதில் பெரும்பகுதி செயல்திறன் மற்றும் மூன்றாண்டுகளை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தொகையை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டார்பக்ஸ்-ல், நிக்கோல் கடந்த செப்டம்பர் 2024 இல் நிறுவனத்தில் இணைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்ததும், அவர் சேர்ந்தவுடன் கையொப்பமிட்ட போனஸாக ஐந்து மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது.

ஜனவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தகவலில், நிக்கோலின் சம்பளத்தில் $1,43,000 அவரது வீட்டு செலவு என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து சியாட்டிலில் உள்ள ஸ்டார்பக்ஸ் தலைமையகத்துக்குச் செல்லும் விமானச் செலவுக்காக 72 ஆயிரம் டாலர்கள். 19 ஆயிரம் டாலர்கள் நிறுவனத்தின் விமானங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான செலவாகும்.

இதையும் படிங்க: Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?

அதிக ஊதியம் பெறும் சிஇஓ:

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரையன் நிகோல் அமெரிக்காவின் அதிக ஊதியம் பெறும் 20 CEO களில் ஒருவர். அவரது ஊதியம் சுமார் 113 மில்லியன் டாலர்கள். நிக்கோலுக்கு முன், ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மண் நரசிம்மன் இருந்த போது விற்பனை சரிந்ததால், உலகெங்கிலும் உள்ள ஸ்டார்பக்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்க தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான புறக்கணிப்பு அழைப்புகளைச் சமாளிக்கத் தவறியதால் நீக்கப்பட்டார். நிக்கோலுக்கு பெரிய நிறுவனங்களை கையாண்ட அனுபவம் அதிகம் உள்ளதால் அவரின் வருகைக்கு பிறகு ஸ்டார் பக்ஸ் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget