ஏரியாவை தாண்டி ஏறி வந்துட்ட.. ஏறு ஜெயிலுக்குள்ள... ! கோழியை சிறைக்குள் வைத்த அமெரிக்க காவல்துறை!
அமெரிக்காவில் உள்ள பென்டகன் பாதுகாப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கோழி ஒன்றை அமெரிக்க பாதுகாப்பு துறை கைது செய்து சிறை பிடித்துள்ளனர்.
அமெரிக்கா பென்டகனில் உள்ள பாதுகாப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கோழி ஒன்று காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகத்திற்கு அருகே திங்கள்கிழமை அதிகாலையில் தளர்வான கோழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்பு துறை சார்பில் தகவல் வெளியானது. இந்த தகவலை வர்ஜீனியாவின் ஆர்லிங்டனின் விலங்கு நல அமைப்பு சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
Apparently, the answer to "why did the chicken cross the road" is to get to the Pentagon?! This chicken was caught sneaking around the security area at the Pentagon (we're not kidding) and our officers picked her up. Now we need a name for her - suggestions welcomed! pic.twitter.com/6RmMSjNKnU
— AWLArlington, VA (@AWLAArlington) January 31, 2022
இதுகுறித்து அந்த விலங்கு நல அமைப்பு அளித்த தகவலில், கோழி குறித்து அதிகாரிகள் எங்களிடம் தகவல் தெரிவித்தனர்.அந்த கோழி தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்கப்பட்டு, எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது. அந்த கோழிக்கு புது வீடு கிடைக்கும்வரை எங்களிடம் பத்திரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் செல்சியா ஜோன்ஸ் கூறுகையில், கோழி எந்த இடத்தில் காணப்பட்டது என்பது குறித்த சரியான இடத்தைத் தெரிவிக்க முடியவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது கோழி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாக வெளியிட எங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அது ஒரு பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் இருந்தது என்று மட்டுமே நாங்கள் கூற முடியும் என்று தெரிவித்ததாகவும் கூறினர்.
Our officers have chosen the name Henny Penny for our #pentagonchicken, and she will be going to live at a local animal sanctuary very soon! https://t.co/qQ7kfYkocM pic.twitter.com/31gugYE4tR
— AWLArlington, VA (@AWLAArlington) February 1, 2022
தற்போது, அந்த கோழிக்கு ஹென்னி பென்னி என்று பெயர் வைக்கப்பட்டு,மேற்கு வர்ஜீனியாவில் ஒரு சிறிய பண்ணையில் வளர்க்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகத்திற்க்குள் விலங்குகள் வர தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்