Greece Accident : கிரீஸில் பெரும் சோகம்.. 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து...32 பேர் உயிரிழப்பு..
கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Greece Accident : கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வடக்கு கிரீஸில் பயணி ரயில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 85 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரீஸ் நாட்டின் ஏதேனிசில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 85 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#Greece A passenger train collided with a freight train in northern Greece, leaving at least eight people dead and dozens injured.
— Mandy Ricci (@ADV561SDV56) March 1, 2023
The accident occurred near #Evangelismos, a town in Tempi, northeast of #larissa . Rescue efforts are ongoing. pic.twitter.com/ndNDzJKzCw
இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வந்தனர். இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்து செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து ஐரோப்பியா குடியரசுத் தலைவர் ராபர்டா மேட்சோலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”கிரீஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்து இரங்கல் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1972ஆம் ஆண்டில் லாரிசாவ் என்ற நகருக்கு அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க