குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் டெஸ்டிங் அறிவிப்பை திரும்பப் பெற அரசு முடிவு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருவதால், ஆறு நாடுகளின் வான் வழியாக வரும் பயணிகளுக்கு 'ஏர் சுவிதா' படிவத்தைப் பதிவேற்றும் விதியையும் மையம் நீக்கியுள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அவர்களது போர்டிங்குக்கு முன் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படும் என்கிற விதியை இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அது திங்கள் முதல் தளர்த்திக்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருவதால், ஆறு நாடுகளின் வான் வழியாக வரும் பயணிகளுக்கு 'ஏர் சுவிதா' படிவத்தைப் பதிவேற்றும் விதியையும் மையம் நீக்கியுள்ளது.
அது குறித்த விவரணையில்,
1. சிவில் விமானப் போக்குவரத்துச் செயலர் ராஜீவ் பன்சாலுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டிருப்பதில், புறப்படுவதற்கு முந்தைய கோவிட்-19 சோதனையின் தற்போதைய ஆணை மற்றும் 'ஏர் சுவிதா' குறித்த சுய சுகாதார அறிவிப்பு ஆறு நாடுகளில் இருந்து வரும் சர்வதேச வருகைகளுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது
2. இருப்பினும் எல்லா நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் எடுக்கப்படும் ரேண்டம் டெஸ்டிங் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும். நவம்பரில் நிறுத்தப்பட்ட இந்த ரேண்டம் டெஸ்டிங், சீனா மற்றும் அண்டை நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா சூழல் காரணமாக டிசம்பர் 24 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.
3. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் அமலுக்கு வரும்.
4. கடந்த சில வாரங்களாக இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 28 நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது புதிய தொற்றுகள் 89 சதவிகிதம் குறைந்துள்ளன.
6. சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், வு ஜுன்யூ, சமீபத்தில் எதிர்காலத்தில் இத்தனை வீரியமாக கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார்.
7. இதற்கிடையே தினமும் 100க்கும் குறைவாகவே இந்தியாவில் தொடர்ந்து எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்றைய தரவுகளின்படி, 124 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆக்டிவ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,843 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,750 ஆக உள்ளது. டிசம்பரில், சீனா தனது ஜீரோ-கோவிட் கொள்கையைத் திரும்பப் பெற்ற பிறகு, பல நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா குறித்த அறிக்கைகள் வெளிவந்தன. இதை அடுத்து கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் தயார்நிலையை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.