மேலும் அறிய

Google Salary: ஊழியர்கள் அனைவருக்கும் இத்தனை கோடி சம்பளமா?- வாய் பிளக்க வைத்த கூகுள்!

கடந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரத்தில் மென்பொறியாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் ஊதியம் பெற்றுள்ளனர். 

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கோடிகளில் சம்பளத்தை கொட்டி கொடுப்பதாக வெளியான தகவல் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. 

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொறியாளர்கள் பல லட்சங்களில் அதிகம் சம்பளம் வாங்குவார்கள் என பொதுவாக கூறப்படுகிறது. இதனால் வரன் தேடுவோர் முதலில் எதிர்பார்ப்பது ஐடி மாப்பிள்ளையைத்தான். ஐ.டி. வேலை பார்த்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என கூறப்படுவதும் உண்டு. ஆனால் ஐ.டி. துறையில் வேலை பார்த்தால் லட்சக்கணக்கில் இல்லை, கோடிகளில் சம்பளம் கொடுப்போம் என்பதை கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. 

தற்போது, கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தில் பணியாளர்கள் ஓராண்டுக்கு ரூ.2.30 கோடியில் இருந்து ரூ.5.8 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். குறிப்பாக மென்பொறியாளர்கள்தான் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக உள்ளனர். கடந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரத்தில் மென்பொறியாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் ஊதியம் பெற்றுள்ளனர். 

அமெரிக்காவின் தலைமை அலுவலகத்தில் உள்ள 12,000 பணியாளர்களின் பட்டியலில் மென்பொறியாளர்கள், பிசினஸ் அனலிஸ்ட், விற்பனை அதிகாரிகள், பிற பிரிவு ஊழியர்களின் சம்பளம் லட்சங்களில் உள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் மட்டும் இல்லாமல், போனஸ், நிறுவனத்தின் பங்குகளின் ஒரு குறிப்பிட்ட தொகை என அதையும் சேர்த்து கூகுள் வழங்கியுள்ளது. இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் கோடிகளில் கொட்டுகிறது. 

உதாரணமாக மென்பொறியாளர்கள் ரூ.5.90 கோடியும், பொறியியல் மேலாளர் மற்றும் விற்பனை அதிகாரிகள் ரூ.3 கோடிக்கு அதிகமாகவும், கார்ப்பரேட் சட்ட ஆலோசகர் ரூ.2.62 கோடியும், விற்பனை திட்ட அதிகாரி ரூ.2.62 கோடியும், அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொது கொள்கை அதிகாரிகள் ரூ.2.56 கோடியும், ஆய்வு விஞ்ஞானிகள் ரூ.2.53 கோடியும், திட்ட மேலாளர்  ரூ.2.46 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் மட்டும் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விவரம் மட்டுமே. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பட்டியல் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க:Exclusive : ’எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஆன்டி இந்தியா எனப் பெயர் வைத்திருக்கலாம்’- வானதி சீனிவாசன் பதிலடி!

Rice Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. அமெரிக்காவில் அலைமோதும் இந்தியர்கள்.. அதிர்ச்சி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sushila Karki: நேபாளத்தின் நம்பிக்கையாகும் பெண்மணி - யார் இந்த சுஷிலா கார்கி? இளைஞர் படையின் பேராதரவு
Sushila Karki: நேபாளத்தின் நம்பிக்கையாகும் பெண்மணி - யார் இந்த சுஷிலா கார்கி? இளைஞர் படையின் பேராதரவு
IND vs UAE: ஐக்கிய அரபு அமீரகத்தை சுருட்டி வீசிய இந்தியா.. வெற்றியுடன் ஆசிய கோப்பையில் அசத்தல் தொடக்கம்
IND vs UAE: ஐக்கிய அரபு அமீரகத்தை சுருட்டி வீசிய இந்தியா.. வெற்றியுடன் ஆசிய கோப்பையில் அசத்தல் தொடக்கம்
Madharaasi Collection: காத்து வாங்குகிறதா கலெக்ஷன்? மதராஸி வசூல் இந்தியாவில் இவ்ளோதானா?
Madharaasi Collection: காத்து வாங்குகிறதா கலெக்ஷன்? மதராஸி வசூல் இந்தியாவில் இவ்ளோதானா?
இ ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? Ola S1 X vs Simple Dot One ரெண்டுல எது பெஸ்ட் - இதுதான்!
இ ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? Ola S1 X vs Simple Dot One ரெண்டுல எது பெஸ்ட் - இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kajal Agarwal : காஜல் அகர்வால் மரணம்?ஷாக்கில் ரசிகர்கள் உண்மை பின்னணி!
மல்லை சத்யா நிரந்தர நீக்கம்! ”ரொம்ப தப்பு பண்ணிட்ட” தூக்கியடித்த வைகோ
ஏர்போர்ட் மூர்த்தி கைது! இரவோடு இரவாக தூக்கிய POLICE! DGP அலுவலகம் முன் கைகலப்பு
செங்கோட்டையன் டெல்லி விசிட்! பாஜகவினருடன் முக்கிய MEETING? அடுத்த ப்ளான் என்ன?
Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sushila Karki: நேபாளத்தின் நம்பிக்கையாகும் பெண்மணி - யார் இந்த சுஷிலா கார்கி? இளைஞர் படையின் பேராதரவு
Sushila Karki: நேபாளத்தின் நம்பிக்கையாகும் பெண்மணி - யார் இந்த சுஷிலா கார்கி? இளைஞர் படையின் பேராதரவு
IND vs UAE: ஐக்கிய அரபு அமீரகத்தை சுருட்டி வீசிய இந்தியா.. வெற்றியுடன் ஆசிய கோப்பையில் அசத்தல் தொடக்கம்
IND vs UAE: ஐக்கிய அரபு அமீரகத்தை சுருட்டி வீசிய இந்தியா.. வெற்றியுடன் ஆசிய கோப்பையில் அசத்தல் தொடக்கம்
Madharaasi Collection: காத்து வாங்குகிறதா கலெக்ஷன்? மதராஸி வசூல் இந்தியாவில் இவ்ளோதானா?
Madharaasi Collection: காத்து வாங்குகிறதா கலெக்ஷன்? மதராஸி வசூல் இந்தியாவில் இவ்ளோதானா?
இ ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? Ola S1 X vs Simple Dot One ரெண்டுல எது பெஸ்ட் - இதுதான்!
இ ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? Ola S1 X vs Simple Dot One ரெண்டுல எது பெஸ்ட் - இதுதான்!
Udhayanidhi Vs EPS: “2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
“2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
பொதுத் தேர்வு: பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு! பள்ளிகள் கவனத்திற்கு!
பொதுத் தேர்வு: பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு! பள்ளிகள் கவனத்திற்கு!
புதுச்சேரியில் 70 காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
புதுச்சேரியில் 70 காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் கனவு நனவாகுமா? நாளை முக்கிய கூட்டம்! 7 சங்கங்கள் பங்கேற்பு
சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் கனவு நனவாகுமா? நாளை முக்கிய கூட்டம்! 7 சங்கங்கள் பங்கேற்பு
Embed widget