China Watch Video: 3 வயது சிறுமியை தரதரவென இழுத்துச் சென்ற குரங்கு! அதிர்ச்சி வீடியோ!
சிறுமியின் பின்னால் சத்தமில்லாமல் வரும் காட்டு குரங்கு ஒன்று ஒரே அடியாக சிறுமியை தாக்கி தள்ளுகிறது.
சீனாவில் 3 வயது சிறுமியை காட்டு குரங்கு ஒன்று தாக்கி இழுத்துக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் மீது காட்டு விலங்குகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றன. அந்த வகையில் சீனாவில் காட்டு குரங்கு ஒன்று சிறுமியை அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஜோங்கிங் மாநகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சாலையில் நின்று சிறுமி விளையாடிக்கொண்டிருக்கிறார்.
அப்போது சிறுமியின் பின்னால் சத்தமில்லாமல் வரும் காட்டு குரங்கு ஒன்று ஒரே அடியாக சிறுமியை தாக்கி தள்ளுகிறது. மீண்டும் சிறுமியை ஒரு பொம்மையைப்போல இழுத்துச் செல்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் துரிதமாக செயல்பட்டு குரங்கிடம் இருந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
Monkey abducts girl in China pic.twitter.com/60Q1xEyZWE
— DM (@DavidMaegraith) April 22, 2022
இது குறித்து தெரிவித்த அந்த சிறுமியின் தாயார், ''நான் வீட்டுக்குள் சமைத்துக் கொண்டிருந்தேன். எனது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். உடனடியாக பக்கத்து வீட்டார் வந்து தகவலை தெரிவித்தனர். பின்னர் சிசிடிவியில் பார்த்தபோது இது மிகவும் கொடூரமான விஷயமாக இருந்தது. உடனடியாக நான் இது குறித்து போலீசாரிடமும், வன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன்’’ என்றார்.
குரங்கு இழுத்துச் சென்றதில் பெரிய காயங்கள் இல்லை என்றாலும் சிறுமியின் முகத்திலும் கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்த ஊர்மக்கள், “ஊருக்குள் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குரங்குகள், வயதானவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும். முதல்முறையாக குழந்தையை தாக்கியுள்ளது. இது குறித்து வன அதிகாரிகளும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். காட்டு குரங்குகள் குறித்து தெரிவித்த போலீசார், ‘ஊருக்கு அருகில் உள்ள மலையில் இருந்து குரங்குகள் ஊருக்குள் வருகின்றன. வயதானவர்களை குறி வைத்து தாக்கும் குரங்குகள் இப்போது சிறுமியை தாக்கியுள்ளது. குரங்குகளை மீண்டும் மலைக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்