மேலும் அறிய

Imran Khan : பாகிஸ்தானில் பரபரப்பு...இம்ரான் கானுக்கு 8 நாட்கள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை எட்டு நாட்கள் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Imran Khan : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை எட்டு நாட்கள் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கைது

இந்த குற்றச்சாட்டு உள்பட இம்ரான்கான் ஆட்சியில் நடந்த ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறை, புலனாய்வு அமைப்பு உள்பட சில அமைப்பினர் அவர் மீது 37 வழக்குகளை பதிவு செய்தனர். இவற்றில் 11 வழக்குகள் கடந்தாண்டு மே மாதம் 25-ந் தேதியும், 8 வழக்குகள் கடந்தாண்டு மே மாதம் 26-ந் தேதியும், 3 வழக்குகள் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ந் தேதியும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இவர் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.  இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.  சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல்  நிலவுகிறது.  

8 நாட்கள் நீதிமன்ற காவல்

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை  எட்டு நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கை மே 17ஆம் தேதி விசாரிப்பதாக இஸ்லாமாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு நிலம் வாங்கியதில் மோசடி தொடர்புடைய வழக்கில் தற்போது 8 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று கைது செய்யப்பட்ட பின்பு, தன்னை காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கழிவறையை கூட பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் இம்ரான் கான் குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
Embed widget