Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Background
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான இபிஎஸ் தொடர்ந்த வழக்கு - டிச.11ம் தேதி ஒத்திவைப்பு
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு வரும் டிசம்பர் 11ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், தஞ்சை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

