NOKIA LOGO: உலகப்புகழ் பெற்ற நோக்கியா.. 60 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் மாற்றம்..! என்ன தெரியுமா?
Finnish 5G உபகரண தயாரிப்பாளரான Nokia Oyj நிறுவனம் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது.
Finnish 5G உபகரண தயாரிப்பாளரான Nokia Oyj நிறுவனம் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது.
நோக்கியா நிறுவனம் மொபைல் போனை தயாரிப்பதை விட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், மக்கள் மொபைல் போன் நிறுவனம் என்பதை எண்ணாத வகையில் இருக்க இந்த லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த லோகோ NOKIA என்ற 5 எழுத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதற்கு முன் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
"பெரும்பாலான மக்களின் மனதில், நாங்கள் இன்னும் ஒரு வெற்றிகரமான மொபைல் போன் பிராண்டாக இருக்கிறோம், ஆனால் நோக்கியாவின் நோக்கம் இதுவல்ல. நெட்வொர்க்குகள் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தும் ஒரு புதிய பிராண்ட் தொடங்க விரும்புகிறோம், இது பாரம்பரிய மொபைல் போன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விஷயம்" என்று தலைமை செயல் அதிகாரி பெக்கா லண்ட்மார்க் பார்சிலோனாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸுக்கு முன்னதாக அளித்த பேட்டியில் கூறினார்.
நோக்கியா பிராண்டட் போன்கள் இன்னும் HMD Global Oy ஆல் விற்கப்படுகின்றன. 2014 இல் வணிகத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு HMD உரிமத்தைப் பெற்றது. நெட்வொர்க் உபகரணங்களுடன் வயர்லெஸ் சேவை வழங்குநர்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தின் வணிகத்தில் சந்தைப் பங்கைச் சேர்ப்பதில் நோக்கியா கவனம் செலுத்தும் என்றும் லண்ட்மார்க் கூறினார்.
Nokia இப்போது சந்தைப் பங்கைப் பெறுவதற்கான கருவி என்று அவர் கூறினார். சீனப் போட்டியாளரான Huawei Technologies பல ஐரோப்பிய அரசாங்கங்கள் 5G நெட்வொர்க்குகளுக்கான உதிரிபாகங்களை விற்பதற்கு தடை விதித்ததை அடுத்து செயல்முறைப்படுத்தப்பட்டது. நோக்கியா நிறுவனம் தனியார் 5G நெட்வொர்க்குகளை விற்பனை செய்யும் வணிகத்தில் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு நோக்கியாவின் வணிகம் 8% பங்கை எட்டியது, மேலும் அடுத்த இலக்கு இதனை இரட்டிப்பாக மாற்றுவது தான் என தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நோக்கியா நிறுவனம் பியூர்புக் ப்ரோ என்ற லேப்டாப்பை அறிமுகம் செய்தது. விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முறையில் இயங்கும் இந்த லேப்டாப் Mobile World Congress 2022 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே டேபுளட்ஸ், வயர்லெஸ் ஹெட்செட் போன்றவற்றை தயாரித்து வரும் நோக்கியா நிறுவனம் இந்த லேப்டாப்பை தற்போது அறிமுகப்படுத்திருக்கிறது. பெரிய அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த லேப்டாப், 15.6 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 17.5 இன்ச் ஸ்கிரீன் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.
இன்டெல் கோர் 3 ப்ராசசர்
இன்டெல் கோர் 3 ப்ராசசரை கொண்டிருக்கும் இந்த லேப்டாப், 8 ஜிபி ரேம்மை கொண்டிருக்கிறது. 2 MB ஃப்ரண்ட் கேமாரவை லேப்டாப்பின் முன்பகுதியில் கொண்டுள்ள இதில் 512GB SSD ஸ்டோரேஜ்ஜை இடம்பெற்றிருக்கிறது.
க்ளார் அடிக்காமல் இருப்பதற்கு தேவையான ஆன்ட்டி கலர் கோட்டிங்கோடு வரும் இந்த லேப்டாப் 1.7 கிலோ மற்றும் 2.5 கிலோ என இரண்டு எடைகளில் கிடைக்கிறது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடருடன், பெரிய ட்ரேக் பேடும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும் லேப்டாப்பின் 15.6 இன்ச் மாடல் லேப்டாப் தோராயமாக 58,800 ரூபாயாகவும், 17.3 இன்ச் மாடல் லேப்டாப் 67,200 ரூபாயாகவும் உள்ளது. ஆனால் இந்த லேப்டாப்புகள் எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.