வழுக்கைதான் பிரச்சனை.. வேலையை விட்டு தூக்கிய மேனேஜர்.. வழக்கு தொடுத்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த பம்பர் ஆஃபர்!
ஒருவர் வழுக்கை தலையுடன் இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம், அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
![வழுக்கைதான் பிரச்சனை.. வேலையை விட்டு தூக்கிய மேனேஜர்.. வழக்கு தொடுத்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த பம்பர் ஆஃபர்! england a 61 year old uk man fired by his boss for being bald wins 70 lakh payout வழுக்கைதான் பிரச்சனை.. வேலையை விட்டு தூக்கிய மேனேஜர்.. வழக்கு தொடுத்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த பம்பர் ஆஃபர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/d17890da77d3d825b4e8d214bd2103251676598665895571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகின் பிரபலமான பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால், இங்கு ஒருவர் வழுக்கை தலையுடன் இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம், அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
வழுக்கை தலை:
இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது முடி உதிர்வை தான். உணவு, பழக்க வழக்கம், குடும்ப ஜீன் போன்ற காரணங்கள் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக அது வழுக்கை தலையில் போய் நிற்கிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பாதுகாக்கும் திறன் கொண்டவரால் கூட தன்னுடைய தலையில் இருக்கும் முடியை பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பலருக்கு தன்னம்பிக்கை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், 61 வயதான மார்க் ஜோன்ஸ் என்பவர் இன்கிலாந்தில் உள்ள லீட்ஸை தளமாக கொண்ட மொபைல் போன் நிறுவனமான டேங்கோ நெட்வொர்க்கில் விற்பனை இயக்குநராக இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென அவரது அலுவலக மேனேஜர் தங்களது நிறுவனத்தில் வழுக்கை தலையுடன் இருக்கும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் இனி வேலையில் இருக்க கூடாது. அப்படி வழுக்கை தலையுடன் இருக்கு நபர்கள் தாங்களாகவே வேலையில் இருந்து நின்றுவிட்டால் நல்லது என்று கட்டளையிட்டுள்ளார்.
நஷ்ட ஈடு:
இதனால் ஜோன்ஸ் விரைவில் தன்னை வெளியேற்றுவதற்கு சாக்குபோக்குகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது என்று உணர்ந்துள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படுவதை உணர்ந்த அவர் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தில், அற்ப காரணத்திற்காகவும், மோசமான அரசியலுக்காகவும் இந்த சதியை செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இதனால் மனமுடைந்த மார்க் ஜோன்ஸ் லீட்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனக்கு தலையில் முடி அதிகமாக இருந்தும், தான் தவறுதலாக இதில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளானேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி மேனேஜர் பிலிப் ஹெஸ்கெத் லீஸ்ட் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கையில். “ எனக்கும் தலையில் வழுக்கை தலை உள்ளது. நானும் வழுக்கை என்பதால் என்னுடைய அலுவலகத்திலும் வழுக்கை தலையுடன் நபர்கள் இருப்பதை விரும்பவில்லை. மேலும், ஆற்றல் மிகுந்த இளமையான நபர்கள் இருந்தால் நன்றாக வேலைகள் நடக்கும் என்றும் திட்டமிட்டேன்” என கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நியாயமற்ற காரணங்களுக்காக டேங்கோ நெட்வொர்க் ஜோன்ஸை எந்த அடிப்படையும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நஷ்ட ஈடாக 71,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 70 லட்சம்) வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)