Elon Musk : ”நல்லா தூங்கணுமா?” : இந்தியாவை பாத்து கத்துக்கோங்கப்பா..” எலான் மஸ்க் சொன்ன சுவாரஸ்ய பதில்
செவ்வாயன்று தூக்கத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
எலான் மஸ்க்கின் ட்விட்டர் டைம்லைன் எப்போதும், சுவாரஸ்யமான கருத்துகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அலுவலரான மஸ்க் தனது நிறுவனங்களைப் பற்றிய அறிவிப்புகள், கிரிப்டோகரன்சி பற்றிய கருத்துகள் மற்றும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளை அதில் பகிர்ந்து கொள்வதில் தவறியதில்லை.
For improved quality of sleep, raise head of your bed by about 3” or 5cm and don’t eat 3 hours before bedtime
— Elon Musk (@elonmusk) July 11, 2022
மேலும் சில அரிதான சந்தர்ப்பங்களில், பல தேவையான டிப்ஸ்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். சமீபத்தில், நன்றாக தூங்குவது எப்படி என்பதற்கான ஆலோசனைகளை அவர் பகிர்ந்தார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலோன் மஸ்க்கிற்கு 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று தூக்கத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒருவரின் உற்பத்தித்திறனுக்கும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். படுக்கையின் தலை பகுதியை 3 முதல் 5 சென்டிமீட்டர் வரை உயர்த்தி வைப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூடுதலாக, தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், "தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த, உங்கள் படுக்கையின் தலை பகுதியை சுமார் 3 அல்லது 5 செமீ வரை உயர்த்தவும், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் அமெரிக்க யூடியூபரான ஜிம்மி டொனால்ட்சன், "இந்த இரண்டு விஷயங்கள் எனக்கு ஏன் உதவும் என்பதை யாராவது விளக்க முடியுமா" என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மஸ்க், "இரவில், அமில பின்னோட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது நமக்கு தெரியாமலேயே நல்ல தூக்கத்தை கெடுத்துவிடும்". இதற்கு பதில் ட்வீட் செய்த டொனால்ட்சன், "சுவாரஸ்யமானது. நான் தற்போது இரவில் 9 மணிநேரம் தூங்குகிறேன். எனது ஆற்றல் அளவுகள்/மூளையின் செயல்பாட்டைக் குறைக்காமல் அதைக் குறைக்க முயற்சிக்கிறேன், ஒருவேளை இது உதவும்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு மீண்டும் பதில் அளித்த மஸ்க், "இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் எதையும் சாப்பிடாத பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்" என பதிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்